புனேயில் விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 இளம்பெண்கள் மீட்பு 5 பேர் கைது
புனேயில், விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
புனே,
புனேயில், விபசாரத்தில் தள்ளப்பட்ட 7 இளம்பெண்கள் மீட்கப்பட்டனர். இதுதொடர்பாக 5 பேர் கைது செய்யப்பட்டனர்.
விபசாரம்
புனே ஹிஞ்சேவாடியில் உள்ள ஒரு அடுக்குமாடி கட்டிடத்தில் விபசாரம் நடந்து வருவதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. இதையடுத்து போலீசார் அங்கு போலி வாடிக்கையாளர் ஒருவரை அனுப்பி சோதனை செய்தனர்.
இதில், அந்த கட்டிடத்தில் உள்ள இரண்டு வீடுகளில் இளம்பெண்களை வைத்து விபசாரம் நடந்து வருவது உறுதிப்படுத்தப்பட்டது. இதையடுத்து அங்கு சென்ற போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, அங்கு விபசாரத்தில் தள்ளப்பட்டு இருந்த 7 இளம்பெண்களை போலீசார் மீட்டனர்.
5 பேர் கைது
டெல்லி, பஞ்சாப், மேற்குவங்கம், மத்திய பிரதேசம் ஆகிய மாநிலங்களை சேர்ந்த அவர்கள் புனேயில் வேலை வாங்கி தருவதாக அழைத்து வரப்பட்டு விபசாரத்தில் தள்ளப்பட்டு இருந்தது தெரியவந்தது.
அவர்களை விபசாரத்தில் தள்ளிய குமார் பிரதான் (வயது40), ரஞ்சித் பிரதான் (25), ஷியாம் நேவார் (23), பிஜூ சர்மா (22), பலிராம் கவுர் (22) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
அவர்களிடம் இருந்து ரூ.10 ஆயிரம் ரொக்கம், 7 செல்போன்கள் உள்ளிட்டவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். மீட்கப்பட்ட இளம்பெண்கள் ஹடப்சரில் உள்ள காப்பகத்துக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
கைதான 5 பேரும் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு போலீஸ் காவலில் ஒப்படைக்கப்பட்டனர்.