திருவல்லிக்கேணியில் கணவன்-மனைவியை தாக்கி வழிப்பறி
திருவல்லிக்கேணியில் கணவன்-மனைவியை தாக்கி மர்ம ஆசாமிகள் வழிப்பறி செய்துள்ளனர்.
சென்னை,
சென்னை தண்டையார்பேட்டையை சேர்ந்தவர் பொன்ராஜ் (வயது 38). நேற்று முன்தினம் இரவு இவர் தனது மோட்டார் சைக்கிளில் திருவல்லிக்கேணி சிவானந்தா சாலையில் தனது மனைவியுடன் சென்று கொண்டிருந்தார். அப்போது இன்னொரு மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம ஆசாமிகள் பொன்ராஜை வழிமறித்து தாக்கினார்கள். அவர் வைத்திருந்த செல்போனையும், அவரது மனைவி அணிந்திருந்த 3 பவுன் தங்க சங்கிலியையும் பறித்தனர். பின்னர் அவர்கள் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவம் தொடர்பாக திருவல்லிக்கேணி போலீஸ் நிலையத்தில் பொன்ராஜ் புகார் கொடுத்துள்ளார்.
இது குறித்து போலீசார் விசாரணை நடத்துகிறார் கள்.