கடுமையான தண்டனையை விரைவாக வழங்க வேண்டும்: சிறுமி மீதான பாலியல் பலாத்காரம் மன்னிக்க முடியாத குற்றம் நடிகர் கமல்ஹாசன் பேட்டி
சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம். இதில் ஈடுபட்டவர்களுக்கு கடுமையான தண்டனையை உடனடியாக வழங்க வேண்டும் என நடிகர் கமல்ஹாசன் தெரிவித்தார்.
ஆலந்தூர்,
மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் நடிகர் கமல்ஹாசன், சென்னை மீனம்பாக்கம் விமான நிலையத்தில் நிருபர்களிடம் கூறியதாவது:-
தமிழகத்தில் ஊழல் அதிகமாக இருப்பதால்தான் நான் கட்சியை தொடங்கி உள்ளேன். இதுவரை தமிழகத்தில் நடந்த வருமான வரி சோதனைகள் மூலம் அகப்பட்ட பணமும், தங்க நகைகளும் என்ன ஆனது?. அவற்றின் மீது என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டு உள்ளன என்பதை பற்றி ஒரு பேச்சும் இல்லையே? என்பதுதான் என் கேள்வி.
வருமான வரி சோதனை நமக்காக நடப்பதாக வைத்துக் கொண்டாலும், அதில் நடப்பது என்ன என்பதை தெரிவிக்க வேண்டாமா?. தெரிவிப்பது கடமை இல்லையா?. கிணற்றில் போட்ட கல்லாக எத்தனை நாட்கள் இருக்க முடியும்.
வருமான வரித்துறை சோதனை கண் துடைப்பாக இருக்கலாம் என்று சந்தேகப்படும் அளவுக்கு வந்துவிட்டது. இதை நிவர்த்தி செய்யவேண்டியது மத்திய அரசின் கடமையாகும். வருமான வரி சோதனை மூலம் அரசுக்கு அச்சுறுத்தலாக இருக்கும் என்ற பேச்சு, கருத்துகளை எல்லாம் முறியடிக்கும் எண்ணம் மத்திய அரசுக்கு இருந்தது என்றால், இதுபற்றி விளக்கம் அளிக்க வேண்டும்.
சிறுமிக்கு பாலியல் தொல்லை கொடுத்தவர்கள் மீது தாக்குதல் நடத்துவது தவறு. சிறுமிகளின் பாதுகாப்பு நலனில் மெத்தனமாக இருந்துவிட்டோமோ என்ற பதற்றம் ஏற்படுகிறது. ‘மகாநதி’ என்ற படத்தை எடுத்துவிட்டு என் கடமை முடிந்துவிட்டதாக கூறமுடியாது. இன்னும் யதார்த்த வாழ்க்கையில் அப்படி நடந்துவிடாமல் நாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும்.
குடும்பத்தில் உள்ளவர்களும், குடும்பத்திற்கு தெரிந்தவர்களும் இதுபோன்ற காரியங்களில் ஈடுபட்டு உள்ளதாக நிரூபணமாகி உள்ளது. யாரோ கதவை உடைத்து கொண்டு வந்து கள்வன் செய்கின்ற வேலை இல்லை இது.
சிறுமி மீது நடந்த பாலியல் சம்பவம் மன்னிக்க முடியாத குற்றம். இதில் ஈடுபட்டவர்களை அடித்து கொன்றுவிட்டால் அது இன்னொரு கொலையாக மாறிவிடும். நீதிமன்றங்களுக்கு வேலை இல்லாமல் போய்விடும். ஆனால் இந்த விவகாரத்தில் நீதி விரைவாக செயல்படவேண்டும். நின்று கொல்வதெல்லாம் நீதிக்கு ஆகாது. எல்லாரும் பாய்ந்து தோலை உரித்து உப்பு கண்டம் போடவேண்டும் என்பது புராதன விஷயம்.
சட்டம் அதற்கான தண்டனைகளை வகுத்து வைத்து இருக்கிறது. இருப்பதில் கடுமையான தண்டனையை வழங்கவேண்டும். இவர்களுக்கு மனிதாபிமானம் கொடுக்க வேண்டிய அவசியமில்லை.
மாற்றுத்திறனாளியான அந்த சிறுமிக்கு தகப்பனார்களாக, சகோதரர்களாக, தமிழர்களாக தலைகுனிவு ஏற்படுத்தும் செயலாக இது உள்ளது. சட்டத்துக்கு உட்பட்டு கடுமையான தண்டனையை விரைவாக நீதிமன்றம் வழங்க வேண்டும். அப்போதுதான் மக்களுக்கு நீதிமன்றத்தின் மீதும், சட்டத்தின் மீதும் நம்பிக்கை வரும்.
இவ்வாறு அவர் கூறினார்.
அப்போது அவரிடம், சேலம்-சென்னை 8 வழிச்சாலையை நடிகர் ரஜினிகாந்த் ஆதரித்து பேசியது பற்றி நிருபர்கள் கேட்டனர்.
அதற்கு நடிகர் கமல்ஹாசன், “மக்களிடம் முதலில் பேசவேண்டும். 8 வழிச்சாலை இல்லை என்றால் எங்கள் வாழ்க்கை தரம் தாமதப்பட்டு இருப்பதாக யாராவது கேட்டார்களா?. சேலம்-சென்னைக்கு இடையே இந்த ஒரு வழிதான் உள்ளதா? வெவ்வேறு பாதைகள் இருக்கின்றன. அவைகள் இதைவிட குறைந்த செலவில் விரைந்து முடிக்க வழிகள் இருக்கின்றன. பல அரசியல் தலைவர்கள் கருத்துகளை சொல்லி இருக்கிறார்கள். அவற்றை எல்லாம் கேட்காமல் இப்படித்தான், இதுதான் என்று மக்களை வற்புறுத்த முடியாது” என்றார்.