கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.90 லட்சம் மோசடி என்ஜினீயர்–மனைவி மீது வழக்குப்பதிவு
திருச்சி உறையூரில் கட்டிட காண்டிராக்டரிடம் ரூ.90 லட்சம் மோசடியில் ஈடுபட்டதாக என்ஜினீயர், அவரது மனைவி மீது போலீசார் வழக்குப்பதிவு செய்தனர்.
திருச்சி,
திருச்சி புத்தூர் சீனிவாசநகரை சேர்ந்தவர் ராஜேஷ்கண்ணா. இவர் கட்டிட காண்டிராக்டர். பங்குதாரராக திருச்சி உறையூர் ராமலிங்கநகரை சேர்ந்த சிவில் என்ஜினீயர் லட்சுமிகாந்தன் என்பவருடன் இணைந்து அடுக்குமாடி வீடுகளை கட்டி விற்பனை செய்து வருகிறார்.
கடந்த 2015–ம் ஆண்டு உறையூர் ராமலிங்கநகர் 3–வது குறுக்குத்தெருவில் 2,600 சதுர அடியில் இன்னொருவருக்கு சொந்தமான இடத்தில், 8 வீடுகள் கொண்ட அடுக்குமாடி குடியிருப்பு வீடுகளை இருவரும் இணைந்து கட்டினார்கள்.
இடத்துக்கு சொந்தக்காரருக்கு 5 வீடுகளையும், மீதம் உள்ள 3 வீடுகளை விற்பனை செய்து காண்டிராக்டர் ராஜேஷ் கண்ணா, என் ஜினீயர் லட்சுமிகாந்தன் ஆகியோர் விற்பனை செய்து பணத்தை பங்கிட்டு கொள்வதாக உறுதிப்பத்திரம் தயாரித்து கொள்ளப்பட்டதாம். கட்டிடம் கட்டுவதற்காக ராஜேஷ்கண்ணா ரூ.95 லட்சம் முதலீடு செய்துள்ளார். இந்த பணத்தில் ரூ.5 லட்சத்தை மட்டும் ராஜேஷ்கண்ணாவுக்கு லட்சுமிகாந்தன் திரும்ப கொடுத்துள்ளார்.
கட்டிடப்பணிகள் முடிந்ததும் 3 வீடுகளில் 2 வீடுகள் உடனடியாக விற்பனை ஆகி விட்டதாம். ஒரு வீட்டை லட்சுமிகாந்தன் அவரது மனைவி சுமதி பெயருக்கு மாற்றிக்கொண்டதாக கூறப்படுகிறது. இதற்கிடையே வீடு விற்பனை செய்த பணத்தில் லாப தொகையையும், முதலீடு செய்த ரூ.90 லட்சத்தையும் ராஜேஷ்கண்ணாவுக்கு திரும்ப கொடுக்காமல் லட்சுமிகாந்தன் மோசடி செய்து விட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக மதுரை ஐகோர்ட்டில் ராஜேஷ்கண்ணா வழக்கு தொடர்ந்தார். வழக்கை விசாரித்த ஐகோர்ட்டு நீதிபதி, திருச்சி மாநகர குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டார். அதன்பேரில் என்ஜினீயர் லட்சுமி காந்தன், அவரது மனைவி சுமதி ஆகியோர் மீது இ.பி.கோ.420, 406 ஆகிய சட்டப்பிரிவுகளின் கீழ் இன்ஸ்பெக்டர் ரமேஷ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.