சமூக வலைதளங்களில் தி.மு.க. தலைவர்கள் பற்றி அவதூறு பரப்பியவரை கைது செய்ய வேண்டும்
தி.மு.க. தலைவர் மு.கருணாநிதி, செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் பற்றி சமூக வலை தளங்களில் அவதூறு பரப்பியவரை கைது செய்ய வேண்டும் என்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவல கத்தில் தி.மு.க.வினர் புகார் அளித்தனர்.
வேலூர்,
வேலூர் மத்திய மாவட்ட தி.மு.க. தகவல் தொழில்நுட்ப அணி அமைப்பாளர் ராஜா குப்பம் முருகானந்தம் தலைமையில் 20-க்கும் மேற்பட்ட தி.மு.க.வினர் நேற்று வேலூர் போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியனிடம் புகார் மனு ஒன்று அளித்தனர். அதில் கூறியிருப்பதாவது:-
தி.மு.க. தலைவரும், முன்னாள் முதல்- அமைச்சருமான கருணாநிதி, செயல் தலைவர் மு.க. ஸ்டாலின், பொதுச்செயலாளர் க.அன்பழகன், கனிமொழி எம்.பி. ஆகியோர் பற்றி சமூக வலைத்தளங்களில் (முகநூலில்) ஆபாசமாகவும், அவதூறாகவும் செய்திகள் தொடர்ந்து பதிவு செய்யப் பட்டு வருகிறது. இவை அனைத்தையும் சுரேஷ் இந்து (இந்து போராளி) என்ற பெயரில் சமூக வலைத்தளங் களில் பதிவு செய்யப்படு கிறது.
சமூக வலைத்தளங்களில் தி.மு.க.வின் முக்கிய தலைவர் களை பற்றி பொய்யான செய்திகள் பரப்புவது மட்டும் அல்லாமல், அவதூறாகவும், ஆபாசமாகவும் கருத்துகள் பரப்புவதால் தலைவர்கள் பெயர்களுக்கு கேடு விளைவிப்பதாக உள்ளது.
இத்தகைய பதிவுகள் தி.மு.க. தொண்டர்கள் மத்தியில் அதிருப்தி மற்றும் கடும் கொந்தளிப்பை ஏற்படுத்தி யுள்ளது. எனவே, அவதூறு பரப்பிய நபரை கைது செய்ய வேண்டும்.
இவ்வாறு அதில் கூறப் பட்டுள்ளது.
மனுவை பெற்றுக்கொண்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு அதிவீரபாண்டியன், இதுதொடர்பாக விசாரித்து உரிய நடவடிக்கை எடுப்பதாக கூறினார்.