கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் கூலித்தொழிலாளி பிணம் போலீசார் விசாரணை
ஒரத்தநாடு அருகே கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகில் கூலித்தொழிலாளி மர்மமான முறையில் இறந்து கிடந்தார். அவர் கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் ஒரத்தநாடு அருகே உள்ள தென்னமநாடு கிராமத்தில் கிராம நிர்வாக அலுவலர் அலுவலக கட்டிடம் உள்ளது. இந்ந அலுவலகத்தின் அருகில் ஒருவர் நேற்று மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதுகுறித்து கிராம மக்கள் போலீசுக்கு தகவல் அளித்தனர். இதைத்தொடர்ந்து சம்பவ இடத்துக்கு விரைந்து சென்ற ஒரத்தநாடு போலீசார் இறந்து கிடந்தவரின் உடலை கைப்பற்றி ஒரத்தநாடு அரசு மருத்துவ மனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இறந்து கிடந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர் என விசாரணை நடத்தினர். விசாரணையில் இறந்து கிடந்தவர் பாபநாசம் அருகே உள்ள மேலகபிஸ்தலம் பகுதியை சேர்ந்த குணசேகரன் (வயது54) என்றும் இவர் கடந்த சில ஆண்டுகளாக ஒரத்தநாடு அருகே உள்ள ஆயங்குடி பகுதியில் தங்கி கூலி வேலை செய்து வந்ததும் தெரியவந்துள்ளது.
கொலை செய்யப்பட்டாரா?
மேலும் போலீசார் நடத்திய விசாரணையில் குணசேகரனை நேற்று சிலர் ஆட்டோவில் கொண்டு வந்து தென்னமநாடு கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் அருகே கீழே போட்டுவிட்டு சென்றது தெரியவந்துள்ளது. இது குறித்து தென்னமநாடு கிராம நிர்வாக அலுவலர் கிருபாகரன் அளித்த புகாரின்பேரில் ஒரத்தநாடு போலீசார் வழக்குப்பதிவு செய்து குணசேகரன் எப்படி இறந்தார்? இவரை யாரும் அடித்து கொலை செய்து வாகனத்தில் கொண்டுவந்து போட்டு சென்றார்களா? என விசாரணை நடத்தி வருகின்றனர்.