ரூ.70 கோடிக்கு மேல் வருமானம் ஈட்டப்படும் பகுதியான தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கப்படுமா?
ஆண்டுக்கு ரூ.70 கோடிக்கு மேல் வரு மானம் ஈட்டப்படும் பகுதியான தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று ரெயில் பயணிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
தஞ்சாவூர்,
தமிழகத்தின் முக்கிய சுற்றுலா தலங்களுள் தஞ்சை மாவட்டமும் ஒன்று. முன்பு இந்த தஞ்சை வழி தான் சென்னையில் இருந்து தென் மாவட்டங்களுக்கும், தென்மாவட்டங்களில் இருந்து சென்னைக்கு செல்வதற்கும் முக்கிய வழித்தடமாக இருந்தது. பின்னர் விழுப்புரம்- திருச்சி இடையே அகல ரெயில்பாதை அமைக்கப்பட்டு ரெயில்கள் அந்த வழியாக இயங்கத்தொடங்கின. அதன்பின்னர் அந்த வழியாகவே தென்மாவட்டங்களுக்கு செல்லும் பெரும்பாலான ரெயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன.
இந்த நிலையில் காவிரி டெல்டா பகுதியான தஞ்சையில் இருந்து திருச்சி இடையே 49 கிலோ மீட்டர் தூரத்திற்கு இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்டு அது செயல்பாட்டுக்கு வந்து விட்டது. இதனால் தஞ்சை-திருச்சி இடையேயான பயண நேரம் 1 மணி நேரத்தில் இருந்து 20 நிமிடம் குறைந்துள்ளது. அதேபோல தஞ்சையில் இருந்து விழுப்புரம் வரையிலும் இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும் என்று வலியுறுத்தப்பட்டு வருகிறது.
தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, சிதம்பரம் அகல ரெயில்பாதை பல புராதன மிக்க தலங்களை கொண்டுள்ளது. இந்த மார்க்கத்தில் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை, பாபநாசம், ஆடுதுறை, திட்டை, பண்டாரவாடை, சுந்தர பெருமாள்கோவில், குத்தாலம், சிதம்பரம், கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட ரெயில் நிலையங்கள் உள்ளன.
இதில் தஞ்சை-விழுப்புரம் இடையே மட்டும் தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை ரெயில் நிலையங்கள் ஏ கிரேடு ஆகும். இந்த ரெயில் நிலையங்களில் அதிக வருவாய் ஈட்டித்தரும் ரெயில் நிலையங்களில் தஞ்சை முதலிடத்தில் உள்ளது. அதைத்தொடர்ந்து கும்பகோணம், மயிலாடுதுறை ரெயில் நிலையங்களும், அதற்கடுத்தபடியாக பாபநாசம், ஆடுதுறை ரெயில் நிலையங்களும் உள்ளன.
இந்த வழியாக சோழன் எக்ஸ்பிரஸ், உழவன் எக்ஸ்பிரஸ், மன்னார்குடி எக்ஸ்பிரஸ், ஜனசதாப்தி, ராமேஸ்வரம் எக்ஸ்பிரஸ் ரெயில்கள் மற்றும் பயணிகள் ரெயில்களும் இயக்கப்பட்டு வருகின்றன. இந்த மார்க்கத்தில் தினமும் 33 ரெயில்கள் ‘கிராசிங்’ மேற்கொள்ள வேண்டி உள்ளது. இதை தவிர சரக்கு ரெயில் போக்குவரத்தும் வெகுவாக உள்ளது. இதனால் ரெயில்களின் வேகம் குறைவதுடன், காலதாமதம் ஏற்படுகிறது. இந்த வழியாக செல்லும் அனைத்து ரெயில்களிலும் பயணிகளின் பயன்பாடு என்பது கூடுதலாகவே உள்ளது.
இந்த வழியாக தினமும் 16 எக்ஸ்பிரஸ் ரெயில்களும், 10 பயணிகள் ரெயில்களும், 6 வாராந்திர விரைவு ரெயில்களும், வாரம் இரு முறை இயக்கப்படும் 4 ரெயில் களும், வாரம் மும்முறை இயக்கப்படும் 2 ரெயில்களும் செல்கின்றன.
தஞ்சை வழித்தடம் மெயின் லைனாக இருந்த காலகட்டத்தில் 20-க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரெயில்கள் இயக்கப்பட்டன. அதன் பின்னர் பல ரெயில்கள் ரத்து செய்யப்பட்டன. ரத்து செய்யப்பட்ட ரெயில்களை மீண்டும் இயக்க வேண்டும் என்றும் பலதரப்பினரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதே நேரத்தில் தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்கப்பட்டால் பயண நேரம் குறையும். இன்னும் அதிக அளவில் ரெயில்கள் இயக்கவும் வாய்ப்புகள் உள்ளன.
இதுகுறித்து தஞ்சை மாவட்ட ரெயில் உபயோகிப்பாளர் நலச்சங்க ஆலோசகர் கிரி கூறியதாவது:-
காவிரி டெல்டா பகுதி வளர்ச்சி அடைய வேண்டுமானால் தஞ்சை-விழுப்புரம் இடையே இரட்டை ரெயில்பாதை அமைக்க வேண்டும். இது விவசாய பகுதியாக இருந்தாலும் தற்போது சுற்றுலா தலமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. எனவே ரெயில் வசதியை அதிகரித்துக்கொடுத்தால் தான் பொருளாதார வளர்ச்சி அடையும். தஞ்சை-விழுப்புரம் இடையே தஞ்சை, கும்பகோணம், மயிலாடுதுறை ரெயில் நிலையங்களில் தான் ஆண்டுக்கு தலா ரூ.15 கோடிக்கு வருமானம் ஈட்டப்படுகிறது.
இது தவிர சீர்காழி, சிதம்பரம், கடலூர், பாபநாசம் ரெயில் நிலையங்களிலும் அதிக அளவில் வருமானம் ஈட்டப்படுகிறது. தஞ்சை-விழுப்புரம் இடையே ஆண்டுக்கு ரூ.70 கோடிக்கு மேல் டிக்கெட் மூலம் வருவாயாக கிடைக்கிறது. இதற்கு குறைவாக உள்ள வருமானம் ஈட்டப்படும் இடங்களில் கூட இரட்டை ரெயில்பாதை அமைக்கப் பட்டுள்ளது.
எனவே பயணிகள் பயன்பாடு அதிகமாக உள்ள தஞ்சை-விழுப்புரம் இடையேயான ரெயில்பாதையையும் இரட்டை ரெயில்பாதையாக மாற்ற வேண்டும். தற்போது இதற்கான அறிவிப்பு வெளியிடப்பட்டால் தான் இன்னும் 10 ஆண்டுகளில் அது பயன்பாட்டுக்கு வரும். தற்போது இந்த வழித்தடத்தில் 95 சதவீதம் ரெயில்கள் இயக்கப்பட்டாலும் இந்த பணிகள் முடிவடையும் போது 140 சதவீத அளவிற்கு ரெயில்கள் இயக்கப்படும்.
தஞ்சை, மயிலாடுதுறை, கும்பகோணத்தில் ஒரு நாளைக்கு சராசரியாக 18 ஆயிரம் பயணிகள் ஏறி, இறங்குகிறார்கள். இந்த வழித்தடம் அதிக பயன்பாடு உள்ள பகுதியாகும். எனவே எல்லா வகையிலும் இந்த பாதையை இரட்டை ரெயில்பாதையாக மாற்ற தகுதி உள்ளது. ரெயில்வே துறை தற்போது பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளிப்பதால் பாதுகாப்பு கருதி எதிர்காலத்தில் கூடுதல் ரெயில்களை இயக்கும் வகையில் தஞ்சை-விழுப்புரம் இடையேயான ரெயில் பாதையை இரட்டை ரெயில்பாதை ஆக்கினால் பராமரிப்புக்கும் எளிதாக இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.