வேம்படிதாளத்தில் கல்லூரி பேராசிரியர் வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு
வேம்படிதாளத்தில், கல்லூரி பேராசிரியர் வீட்டு பூட்டை உடைத்து 10 பவுன் நகை திருட்டு போனது. இது தொடர்பாக போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கொண்டலாம்பட்டி,
சேலம் மாவட்டம் வேம்படிதாளத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 28). இவருடைய மனைவி வித்யா (25). அவுரங்காபாத்தில் உள்ள ஒரு தனியார் என்ஜினீயரிங் கல்லூரியில் மணிகண்டன் பேராசிரியராக வேலை செய்து வருகிறார். அவ்வப்போது அவர் வேம்படிதாளம் வந்து செல்வார். தற்போது வித்யா மட்டும் வேம்படிதாளத்தில் வசித்து வருகிறார்.இந்த நிலையில் நேற்று ஆடிப்பிறப்பு என்பதால் இதை கொண்டாட நேற்று முன்தினமே வித்யா வீட்டை பூட்டி விட்டு இளம்பிள்ளையில் உள்ள அவரது பெற்றோர் வீட்டுக்கு சென்று விட்டார். நேற்று காலை வேம்படிதாளத்தில் உள்ள மணிகண்டனின் வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. இதுகுறித்து வித்யாவுக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் அவர் வந்து பார்த்தபோது, வீட்டு பீரோவும் உடைக்கப்பட்டு அதில் இருந்த 10 பவுன் நகை, 7 பட்டுப்புடவைகள், ரூ.7 ஆயிரம் ரொக்கம் ஆகியவை திருடப்பட்டு இருந்தது தெரியவந்தது. இதுகுறித்து கொண்டலாம்பட்டி போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதன்பேரில் இன்ஸ்பெக்டர் ரவிக்குமார் மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். முதற்கட்ட விசாரணையில் வீட்டில் யாரும் இல்லாததை அறிந்த மர்ம ஆசாமிகள் நள்ளிரவில் வீட்டின் பூட்டை உடைத்து இந்த துணிகர சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.