விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் கலப்பு இல்லை
ஈரோடு மாவட்டத்தில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் கலப்பு இல்லை என்று உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கலைவாணி கூறினார்.
ஈரோடு,
தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட கடல் மீன்களில் பார்மலின் எனப்படும் அபாயகரமான ரசாயனம் பூசப்பட்டு இருப்பதாக தகவல்கள் வெளியாகின. கடலில் பிடிக்கப்படும் மீன்கள் கெட்டுப்போகாமல் இருக்க இந்த ரசாயனம் பயன்படுத்தப்படுவதாகவும் தெரிய வந்தது.
இதுதொடர்பாக பல்வேறு இடங்களில் சோதனை நடத்தப்பட்டது. அப்போது ரசாயனம் பூசப்பட்ட மீன்கள் விற்பனைக்கு கொண்டு வந்தது கண்டுபிடிக்கப்பட்டு, அந்த மீன்கள் அழிக்கப்பட்டன. சென்னையிலும் இதுபோன்று மீன்கள் கைப்பற்றப்பட்டன. அதைத்தொடர்ந்து தமிழகம் முழுவதும் மீன்கடைகளில் தீவிர சோதனை நடந்து வருகிறது.
ஈரோடு மாவட்ட கலெக்டர் எஸ்.பிரபாகர் உத்தரவின் பேரில் ஈரோடு மாவட்டத்தில் மாவட்ட உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து கட்டுப்பாட்டு துறை நியமன அதிகாரி டாக்டர் கலைவாணி தலைமையில் சோதனைகள் நடந்து வருகிறது. நேற்று ஈரோடு ஸ்டோனி பாலம் அருகே உள்ள மீன் சந்தையில் திடீர் சோதனை நடந்தது. உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கலைவாணி தலைமையில் மாவட்ட மீன்வளத்துறை ஆய்வாளர் கா.சசிகலா, உணவு பாதுகாப்பு துறை ஆய்வாளர்கள் கோவிந்தராஜன், ரவி, செல்வன், செந்தில்குமார் ஆகியோர் கொண்ட குழுவினர் அங்கு உள்ள கடைகளில் சோதனை நடத்தினார்கள். கடைகளில் இருந்து சில மீன்களை எடுத்து வந்து பரிசோதனை செய்தனர். மீன்வளத்துறை ஆய்வாளர் சசிகலா கொண்டு வந்த ரசாயன பரிசோதனை பெட்டியில் இருந்து குடுவைகளில் மீன் சதை போடப்பட்டது. அதில் ஒரு ரசாயனத்தை ஊற்றி நன்றாக கலக்கிவிட்டு, மீண்டும் ஒரு ரசாயனத்தை ஊற்றினார். அப்போது குடுவையில் எந்த மாற்றமும் இல்லை. குடுவையின் உள்ளே இருந்த மீனின் சதை மஞ்சள் நிறமாக மாறினால் அது பார்மலின் ரசாயனம் கலக்கப்பட்டது என்பதை காண்பித்து விடும். ஆனால் எந்த மாற்றமும் இல்லாததால் மீனவர்கள் நிம்மதி அடைந்தனர். சோதனை அடிப்படையில் பல கடைகளில் இருந்தும் மீன் சதை எடுக்கப்பட்டு இந்த பரிசோதனையில் ஈடுபடுத்தப்பட்டது. இதுபற்றி உணவு பாதுகாப்பு அதிகாரி டாக்டர் கலைவாணி கூறியதாவது.
ஈரோடு மாவட்டத்தில் ஈரோடு ஸ்டோனி பாலம், கருங்கல்பாளையம், பெருந்துறை, பவானி, கோபி, சத்தியமங்கலம், பவானிசாகர் உள்ளிட்ட அனைத்து மீன் சந்தை பகுதிகளிலும் கடந்த 2 வாரங்களாக சோதனை நடந்து வருகிறது. ஈரோடு மாவட்டத்தை பொறுத்தவரை எந்த இடத்திலும் விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட மீன்களில் ‘பார்மலின்’ ரசாயனம் கலந்திருப்பது கண்டறியப்படவில்லை.
தமிழ்நாடு மீன்வளத்துறை மூலம் மீன்களை பரிசோதனை செய்ய வழங்கப்பட்டு இருக்கும் சோதனை பெட்டி (கிட்) மிகவும் பயனுள்ளதாக இருக்கிறது. இந்த சோதனை தினசரி ஒவ்வொரு பகுதியிலும் தொடரும். இதுபோல் மீன் சந்தைகள் மற்றும் மீன்கள் விற்பனை செய்யும் கடைகள் அனைத்தும் சுகாதாரமாக வைத்துக்கொள்ள மீன் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தி இருக்கிறோம். சுகாதாரமாக கடைகளை வைக்காத விற்பனையாளர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். இவ்வாறு டாக்டர் கலைவாணி கூறினார்.