புகையிலை பொருட்கள் விற்ற 2 பேர் சிக்கினர்
புகையிலை பொருட்கள் விற்ற 2 பேரை போலீசார் கைது செய்தனர்.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் போலீசார் பஸ் நிலையம் பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்குள்ள பெட்டிக்கடைகளில் தியாகதுருகம் நீட்டாநகரை சேர்ந்த அன்புரோஸ் மகன் டேவிட்(வயது 22), கள்ளக்குறிச்சி அண்ணாநகரை சேர்ந்த சண்முகம் மகன் கோபி(27) ஆகியோர் புகையிலை பொருட்களை விற்பனை செய்து கொண்டிருந்தனர். இதை பார்த்த போலீசார் டேவிட், கோபி ஆகிய 2 பேரையும் கைது செய்து அவர்களிடமிருந்த 15 பாக்கெட் புகையிலை பொருட்களை பறிமுதல் செய்தனர்.