வேலைவாய்ப்பு செய்திகள் : அழைப்பு உங்களுக்குத்தான்!

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் பணிகளுக்கு 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள்.

Update: 2018-07-17 05:01 GMT
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம்

சென்ட்ரல் எலக்ட்ரானிக்ஸ் லிமிடெட் எனப்படும் பொதுத்துறை நிறுவனத்தில் உதவி பொது மேலாளர், கணக்கு அதிகாரி உள்ளிட்ட பணிகளுக்கு 33 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். பி.இ., பி.டெக். மற்றும் சி.ஏ., ஐ.சி.டபுள்யு.ஏ., எம்.பி.ஏ. படித்தவர்களுக்கு பணிகள் உள்ளன. அதிகபட்சம் 50 வயதுடையவர்களுக்கும் பணிகள் உள்ளன. அந்தந்த பணிக்கான சரியான கல்வித்தகுதி, வயது வரம்பு உள்ளிட்ட முழுமையான விவரங்களை இணையதளத்தில் பார்த்துவிட்டு விண்ணப்பிக்கலாம். இதற்கான விண்ணப்பம் 21-7-2018-ந் தேதி செயல்பாட்டிற்கு வரும். 11-8-2018-ந் தேதி விண்ணப்பிக்க கடைசி நாளாகும். விரிவான விவரங்களை https://hr2016.celsolar.in என்ற இணையதள பக்கத்தில் பார்க்கலாம்.

விமான நிறுவனம்

இந்துஸ்தான் ஏரோனாட்டிக்ஸ் லிமிடெட் எனப்படும் விமான நிறுவனம், இந்திய விமானப்படையின் கீழ் செயல்படுகிறது. தற்போது இந்த நிறுவனத்தில் அப்ரண்டிஸ் பயிற்சிப் பணிக்கு 61 பேர் தேர்வு செய்யப்படுகிறார்கள். எலக்ட்ரானிக்ஸ், மெக்கானிக்கல், எலக்ட்ரிக்கல், சிவில், ஐ.டி., கம்ப்யூட்டர் சயின்ஸ் போன்ற என்ஜினீயரிங் டிப்ளமோ படித்தவர்கள் இந்த பயிற்சியில் சேர விண்ணப்பிக்கலாம். விண்ணப்பதாரர் 26 வயதுக்கு உட்பட்டவர்களாக இருக்க வேண்டும். விண்ணப்பதாரர்கள் இது பற்றிய விவரங்களை www.halindia.com என்ற இணையதள பக்கத்தில் பார்த்துவிட்டு, 27-7-2018-ந் தேதிக்குள் சென்றடையும் வகையில் விண்ணப்பம் அனுப்ப வேண்டும். 


மேலும் செய்திகள்