கிணற்றில் பிணமாக மிதந்த மாணவன் கொலையா? போலீசார் விசாரணை
கயத்தாறில் கிணற்றில் 10-ம் வகுப்பு மாணவன் பிணமாக மிதந்தான். அவன் கொலை செய்யப்பட்டானா? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கயத்தாறு,
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு அருகே உள்ள தெற்கு மயிலோடை கிராமத்தைச் சேர்ந்தவர் பீட்டர். விவசாயி. இவருடைய மகன் உடையார் (வயது 16). இவன் கயத்தாறில் உள்ள தனியார் பள்ளிக்கூடத்தில் 10-ம் வகுப்பு படித்து வந்தான். இவன் நேற்று காலையில் வழக்கம்போல் பள்ளிக்கூடத்துக்கு புறப்பட்டு சென்றான்.
மதியம் பள்ளிக்கூடத்தில் மாணவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டதாகவும், இதுதொடர்பாக உடையாரை ஆசிரியர்கள் கண்டித்ததாகவும் கூறப்படுகிறது. இதுகுறித்து உடையாரின் பெற்றோருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே உடையாரின் அண்ணனும், ஆட்டோ டிரைவருமான அல்பர்ட் மதியம் 3.45 மணி அளவில் பள்ளிக்கூடத்துக்கு சென்றார். அப்போது உடையார் வகுப்பறையில் படித்து கொண்டிருப்பதாக ஆசிரியர்கள் தெரிவித்தனர். இதையடுத்து அல்பர்ட் திரும்பி சென்று விட்டார்.
இந்த நிலையில் பள்ளிக்கூடம் முடிந்ததும், உடையார் வீட்டுக்கு செல்லவில்லை. எனவே அவரை குடும்பத்தினர் பல்வேறு இடங்களில் தேடினர். இதற்கிடையே பள்ளிக்கூடத்தில் இருந்து சுமார் 100 மீட்டர் தொலைவில் தங்கமணி என்பவருக்கு சொந்தமான விவசாய நிலத்தில் உள்ள கிணற்றில் உடையார் பிணமாக மிதந்தான். தோட்டத்தில் குளிக்க சென்றவர்கள், இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து கயத்தாறு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் ஆவுடையப்பன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். கழுகுமலை தீயணைப்பு நிலைய வீரர்கள் விரைந்து சென்று, கிணற்றில் கயிறு கட்டி இறங்கி, உடையாரின் உடலை மீட்டனர். உடையாரின் உடலை போலீசார் கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்தனர். பள்ளிக்கூடத்தில் ஆசிரியர்கள் கண்டித்ததால், மனமுடைந்த உடையார் கிணற்றில் குதித்து தற்கொலை செய்தானா? அல்லது மாணவர்களுக்கு இடையே ஏற்பட்ட மோதலில் அவன் கொலை செய்யப்பட்டானா? என பல்வேறு கோணங்களில் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். 10-ம் வகுப்பு மாணவன் கிணற்றில் பிணமாக மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.