அருப்புக்கோட்டையில் போலீஸ் நிலையம் முன்பு திரண்ட பொதுமக்கள்

அருப்புக்கோட்டையில் கோவில் சாவியை பெற்று தரக்கோரி காவல் நிலையத்தில் பொதுமக்கள் திரண்டனர்.

Update: 2018-07-16 22:30 GMT

அருப்புக்கோட்டை ,

 அருப்புக்கோட்டை பொட்டில்பட்டி பாண்டியன் தெருவில் கோவில் உள்ளது. இந்த கோவிலை பூட்டி சாவியை வைத்து கொண்டதாகவும், அதனை பெற்று தருமாறு டவுண் காவல் நிலையத்தில் பெண்கள் உள்பட 30க்கும் மேற்பட்டோர் திரண்டதால் பரபரப்பு ஏற்ப்பட்டது.

 இது குறித்து அவர்கள் மனுவில் குறிப்பிட்டிருப்பதாவது:-

 எங்கள் பகுதியில் உள்ள முத்துமாரியம்மன் கோவில் ஊர் உறவினமுறைக்கு பொதுவான கோவில் என்றும், தற்போது பூசாரி ஆறுமுகம் என்பவர் தனக்கு சொந்தமானது என்று கூறி கோவிலை பூட்டி வைத்துள்ளார். இது சம்பந்தமாக ஊர் உறவின்முறை கூடி பூசாரியை பதவியில் இருந்து நீக்கி தீர்மானம் நிறைவேற்றினோம். இதனை தாசில்தார், கிராம நிர்வாக அலுவலர் போலீஸ் இன்ஸ்பெக்டருக்கு மனு செய்துள்ளோம். வருவாய்துறை அதிகாரிகளிடம் மனு விசாரணையில் உள்ள போதும் பூசாரி ஆறுமுகம் தினந்தோறும் அவரது குடும்பத்தினர் கோவிலுக்கு வந்து வழிபட்டு வருகின்றனர், பூசாரியின் தன்னிச்சையான நடவடிக்கையை தடுத்து கோவிலின் சாவியை பெற்று தரவேண்டும் ஊர் தலைவர் தலைமையில் என்று டவுண் காவல் நிலையத்தில் ஒன்று திரண்டனர்,

மேலும் செய்திகள்