விளையாட்டு போட்டிக்கு அழைத்துச்சென்ற போது மினி லோடு வேன் கவிழ்ந்து மாணவரின் கை துண்டானது
விளையாட்டு போட்டிக்காக அழைத்துச்சென்ற போது சாலையோர பள்ளத்தில் மினி லோடு வேன் கவிழ்ந்தது. இதில் ஒரு மாணவரின் வலது கை துண்டானது. மேலும் 14 பேர் படுகாயமும், சிலர் லேசான காயங்களும் அடைந்தனர். இதை கண்டித்து பள்ளியை பெற்றோர் முற்றுகையிட்டனர்.
திருப்போரூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் திருப்போரூரில் அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளி உள்ளது. கல்பாக்கம் அருகே கூவத்தூரில் உள்ள பள்ளியில் காஞ்சீபுரம் மாவட்ட அளவிலான கைப்பந்து விளையாட்டு போட்டி நேற்று நடைபெற்றது.
இந்த போட்டியில் கலந்து கொள்வதற்காக இந்த பள்ளியை சேர்ந்த 32-க்கும் மேற்பட்ட மாணவர்கள், உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன்(வயது 32) என்பவருடன் மினிலோடு வேன் ஒன்றில் சென்றனர். ஆசிரியர் அன்பரசனுக்கு சொந்தமான அந்த மினிலோடு வேனை, அவரே ஓட்டிச்சென்றதாக கூறப்படுகிறது.
பழைய மாமல்லபுரம் சாலையில் சிறுதாவூர் ஜெயலலிதா பங்களா எதிரே கருங்குழி பள்ளம் என்ற இடத்தில் சென்றபோது திடீரென அந்த மினி லோடு வேன் நிலைதடுமாறி சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது. இதனால் அதில் பயணம் செய்த மாணவர்கள் கூச்சலிட்டனர்.
அப்போது அந்த வழியாக சென்ற பொதுமக்கள், கவிழ்ந்து கிடந்த மினி லோடு வேனில் சிக்கித்தவித்த மாணவர்களை மீட்டனர். இதில் 7-ம் வகுப்பு படிக்கும் பிரகாஷ்ராஜ்(12) என்ற மாணவரின் வலது கை துண்டானது.
மேலும் திருப்போரூர் பகுதியை சேர்ந்த பரத், ரூபேஷ், பிரகாஷ், அருண்குமார், உதயா, மனோஜ்குமார், முனீஸ்வரன், லோகேஷ், சந்திப், நந்தகுமார் உள்பட 14 மாணவர்களுக்கு கை, கால், தலை, முகம் உள்பட பல்வேறு இடங்களில் பலத்த காயமும், மீதம் உள்ள மாணவர்கள் சிறு சிறு காயங்களுடனும், உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் காயம் ஏதும் இன்றியும் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினார்கள்.
கை துண்டான மாணவர் பிரகாஷ்ராஜ் மட்டும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை பெற்று வருகிறார். மற்ற மாணவர்கள் திருப்போரூர், மாமல்லபுரம் அடுத்த பூஞ்சேரி ஆகிய அரசு மருத்துவமனைகளிலும், கேளம்பாக்கம் மற்றும் அம்மாபேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனைகளிலும் அனுமதிக்கப்பட்டு உள்ளனர்.
இந்த விபத்து பற்றி தகவல் அறிந்ததும் மாணவர்களின் பெற்றோர் மற்றும் அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் பாதுகாப்பு இல்லாமல் மினிலோடு வேனில் மாணவர்களை அனுப்பிய பள்ளி நிர்வாகத்தை கண்டித்து அரசு பள்ளியை முற்றுகையிட்டனர். பின்னர் பள்ளி எதிரே அவர்கள் சாலை மறியலிலும் ஈடுபட்டனர்.
இதுபற்றி தகவல் அறிந்து வந்த திருப்போரூர் போலீசார், சாலை மறியலில் ஈடுபட்டவர்களை சமரசம் செய்து கலைந்து போகச்செய்தனர்.
இதையடுத்து காலை 11 மணியளவில் பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு மாணவர்கள் அனைவரும் வீட்டுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.
இந்த விபத்து தொடர்பாக திருப்போரூர் போலீசார் விசாரணை மேற்கொண்டு உதவி தலைமை ஆசிரியர் மாரியப்பன் மற்றும் உடற்கல்வி ஆசிரியர் அன்பரசன் ஆகியோர் மீது வழக்குப்பதிவு செய்தனர்.
பின்னர் மினிலோடு வேனை ஓட்டிச்சென்று விபத்தை ஏற்படுத்தியதாக உடற்கல்வி ஆசிரியர் அன்பரசனை போலீசார் கைது செய்தனர்.