பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கு: அரசு மருத்துவமனையில் இருந்த மாணவி மகளிர் சிறையில் அடைப்பு
பிசியோதெரபிஸ்ட் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு அரசு மருத்துவமனையில் இருந்த மாணவி ஈஸ்வரி திருச்சி மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.;
ஸ்ரீரங்கம்,
அரியலூர் மாவட்டம், பொன்பரப்பியை சேர்ந்தவர் பிசியோதெரபிஸ்ட் விஜயகுமார்(வயது 36). இவர் சென்னையில் தங்கி தனியார் மருத்துவமனையில் பணியாற்றி வந்தார். இவருக்கும், திருச்சி உறையூரை சேர்ந்தவரும், சென்னையில் தங்கி இருந்து சி.ஏ. படித்து வரும் மாணவி ஈஸ்வரிக்கும்(21) பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கத்தை பயன்படுத்தி ஈஸ்வரியுடன் விஜயகுமார் உல்லாசம் அனுபவித்தார். மேலும், அதனை செல்போனில் வீடியோ எடுத்து வைத்து கொண்டு ஈஸ்வரியிடம் தன்னை திருமணம் செய்து கொள்ளாவிட்டால், ஆபாச வீடியோவை இணையதளத்தில் வெளியிட்டு விடுவேன் என்றும் விஜயகுமார் மிரட்டி வந்தார்.
இதனால், ஈஸ்வரி அவரை தீர்த்து கட்ட முடிவு செய்தார். இதற்காக இ.பி.ரோட்டை சேர்ந்த மாரிமுத்து மூலம் திட்டம் தீட்டினார். இதையடுத்து கடந்த 8-ந் தேதி விஜயகுமாரை திருச்சிக்கு வரவழைத்து திருவளர்ச்சோலை அருகே காவிரி கரையோரம் அழைத்து சென்றார். அங்கு ஏற்கனவே தயாராக இருந்த மாரிமுத்து, கணேசன், குமார் ஆகியோர் விஜயகுமாரை கத்தியால் குத்தி கொலை செய்தனர். பின்னர் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றனர்.
இந்த கொலை வழக்கில் துப்பு துலக்கிய ஸ்ரீரங்கம் போலீசார் மாணவி ஈஸ்வரி உள்பட 4 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை கடந்த 13-ந் தேதி கோர்ட்டில் ஆஜர்படுத்தி 3 பேரையும் திருச்சி மத்திய சிறையில் அடைத்தனர். ஈஸ்வரியை காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைக்க அழைத்து சென்றபோது, அவருக்கு அரசு மருத்துவமனையில் மருத்துவ பரிசோதனை நடத்தி சிறைக்கு அழைத்து வரும்படி கூறினர்.
இதையடுத்து அரசு மருத்துவமனையில் ஈஸ்வரி அனுமதிக்கப்பட்டார். 2 நாட்களாக மருத்துவமனையில் இருந்த ஈஸ்வரி நேற்று மாலை பலத்த போலீஸ் பாதுகாப்புடன் அழைத்து செல்லப்பட்டு காந்தி மார்க்கெட்டில் உள்ள மகளிர் சிறையில் அடைக்கப்பட்டார்.
இந்த கொலை வழக்கு தொடர்பாக சென்னை வடபழனியில் விஜயகுமார் வாடகைக்கு தங்கி இருந்த வீட்டின் உரிமையாளரிடம் போலீசார் போனில் விசாரித்தனர். மேலும், அந்த வீட்டில் விஜயகுமாரின் சகோதரர் தங்கி இருந்ததால் அங்கு நேரில் சென்று சோதனை நடத்தவும் திட்டமிட்டு இருந்தனர். இதற்காக தனிப்படை போலீசார் சென்னைக்கு செல்ல இருந்தனர். ஆனால். விஜயகுமாரின் சகோதரரை அந்த வீட்டின் உரிமையாளர் காலி செய்யும்படி கூறி விட்டதாக தெரிகிறது.
இதனால், அந்த வீட்டில் இருந்த பொருட்களை அப்புறப்படுத்தப்பட உள்ளனர். அதற்குள் தனிப்படை போலீசார் சென்னை சென்று விஜயகுமார் தங்கி இருந்த வீட்டில் வழக்கு சம்பந்தமாக ஏதேனும் ஆதாரங்கள் உள்ளதா? என்று சோதனை நடத்த உள்ளனர்.