கர்நாடக எம்.பி.க்களுடன் டெல்லியில் நாளை குமாரசாமி ஆலோசனை
காவிரி மேலாண்மை ஆணைய பிரச்சினை குறித்து கர்நாடக எம்.பி.க்களுடன் நாளை (புதன்கிழமை) டெல்லியில் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் மத்திய மந்திரிகளையும் குமாரசாமி சந்தித்து பேச முடிவு செய்துள்ளார்.
பெங்களூரு,
கர்நாடக முதல்-மந்திரி குமாரசாமி 2 நாட்கள் சுற்றுப்பயணமாக டெல்லி புறப்பட்டு செல்கிறார். இதற்காக இன்று (செவ்வாய்க்கிழமை) காலையில் பெங்களூருவில் இருந்து விமானத்தில் அவர் டெல்லிக்கு புறப்பட்டு செல்ல உள்ளார். டெல்லியில் நாளை (புதன்கிழமை) கர்நாடக மாநில எம்.பி.க்களின் கூட்டத்திற்கு முதல்-மந்திரி குமாரசாமி அழைப்பு விடுத்துள்ளார். இந்த கூட்டத்தில் கர்நாடகத்தை சேர்ந்த எம்.பி.க்கள், மேல்-சபை எம்.பி.க்கள் கலந்துகொள்ள உள்ளனர்.
கூட்டத்தில் காவிரி மேலாண்மை ஆணையத்தால் கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகள் குறித்தும், கர்நாடகத்திற்கு ஏற்பட்டுள்ள அநீதிகள் பற்றியும் எம்.பி.க்களுடன் முதல்-மந்திரி குமாரசாமி ஆலோசனை நடத்த உள்ளார். மேலும் காவிரி மேலாண்மை பிரச்சினை குறித்து நாடாளுமன்ற மழைக் கால கூட்டத்தொடரில் கர்நாடக எம்.பி.க்கள் பேச வேண்டும் என்று அவர்களிடம் குமாரசாமி வலியுறுத்த தீர்மானித்துள்ளார். கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதி மற்றும் வளர்ச்சி திட்டங்கள் உள்ளிட்டவைகள் குறித்தும் எம்.பி.க்களுடன் குமாரசாமி ஆலோசனை நடத்துகிறார்.
அதே நேரத்தில் கர்நாடகத்திற்கு மத்திய அரசு ஒதுக்க வேண்டிய நிதிகள் குறித்தும், வளர்ச்சி திட்டங்கள் பற்றியும் மத்திய நிதி மந்திரி அருண் ஜெட்லியையும், கர்நாடக மாநில விவசாயிகள் பிரச்சினை குறித்து மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நலத்துறை மந்திரி ராதா மோகன்சிங்கையும் நாளை மதியம் முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேச்சு வார்த்தை நடத்த முடிவு செய்துள்ளார்.
இதுதவிர அகில இந்திய காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி மற்றும் காங்கிரஸ் தலைவர்களையும் முதல்-மந்திரி குமாரசாமி சந்தித்து பேச இருக்கிறார். 2 நாட்கள் சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு வருகிற 19-ந் தேதி காலையில் டெல்லியில் இருந்து அவர் பெங்களூருவுக்கு புறப்பட்டு வருகிறார்.