குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் வாகனங்கள் மாற்றுப்பாதையில் இயங்கின
மணவாளக்குறிச்சி அருகே குடிநீர் குழாய் உடைந்ததால் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டது. இதையடுத்து அந்த வழியாக சென்ற வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டன.
மணவாளக்குறிச்சி,
குழித்துறை அருகே உள்ள காப்புக்காட்டில் இருந்து கன்னியாகுமரி ஆரோக்கியபுரம் வரை கூட்டுக்குடிநீர் திட்டத்துக்காக சாலையில் குழாய்கள் பதிக்கப்பட்டுள்ளன. இந்த குழாய்கள் மணவாளக்குறிச்சி வழியாக செல்கிறது. நேற்று முன்தினம் இரவு மணவாளக்குறிச்சி அருகே பிள்ளையார்கோவில் என்ற இடத்தில் குடிநீர் திட்ட குழாயில் உடைப்பு ஏற்பட்டது. இதனால், குழாயில் இருந்து அதிக அளவில் தண்ணீர் வெளியேறி ஆறாக ஓடியது. அதிவேகத்தில் தண்ணீர் வெளியேறியதால் சாலையில் ராட்சத பள்ளம் ஏற்பட்டு சாலை முற்றிலுமாக துண்டிக்கப்பட்டது.
இதுகுறித்து அந்த பகுதியினர் குடிநீர் வாரிய ஊழியர்களுக்கு தகவல் கொடுத்தனர். உடனே, குழாய் வழியாக செல்லும் தண்ணீர் நிறுத்தப்பட்டது.
சாலையில் ஏற்பட்ட பள்ளத்தால் அந்த வழியாக வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதையடுத்து வாகனங்கள் வள்ளியாற்று பாலத்தில் இருந்து திரும்பி மாற்றுப்பாதையில் இயங்கின.
தொடர்ந்து, நேற்று காலையில் ஊழியர்கள் வரவழைக்கப்பட்டு குழாயில் ஏற்பட்ட உடைப்பை சரி செய்யவும், சாலையை சீரமைக்கவும் பணிகள் தொடங்கப்பட்டது. குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டதால் அந்த பகுதி மக்கள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர்.
கடந்த வாரம் இதுபோல் மணவாளக்குறிச்சி சந்திப்பில் குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு சாலை துண்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.