கொடுத்த கடனை திருப்பி கேட்ட பைனான்சியர் மீது தாக்குதல் பெண் உள்பட 2 பேர் கைது

கொடுத்த கடனை திருப்பி கேட்ட பைனான்சியர் மீது தாக்குதல் நடத்திய பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

Update: 2018-07-15 22:38 GMT
அம்பத்தூர்,

சென்னை அரும்பாக்கம் சத்யா நகர் பகுதியை சேர்ந்தவர் சண்முகவேல் (வயது 37). பைனான்சியர். இவரிடம், அயனம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஜெயந்தி (32), ரூ.12 லட்சம் கடன் வாங்கினார். அதில் இருந்து சண்முகவேலுக்கும், ஜெயந்திக்கும் இடையே தொடர்பு ஏற்பட்டது. இதையடுத்து இருவரும் சேர்ந்து குடும்பம் நடத்தி வந்தனர்.

இந்நிலையில் ஜெயந்திக்கு, அம்பத்தூரை சேர்ந்த ஆட்டோ டிரைவர் முருகனுடன் (37) தொடர்பு ஏற்பட்டது. இதனால் ஜெயந்தி, முருகனுடன் குடும்பம் நடத்த தொடங்கினார்.

தன்னை விட்டு ஜெயந்தி பிரிந்ததால், தான் கொடுத்த பணத்தை கொடுக்குமாறு அவருக்கு சண்முகவேல் நெருக்கடி கொடுத்தார். ஏற்கனவே ஜெயந்தி ரூ.5 லட்சம் கொடுத்து இருந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு சண்முகவேலும், அவரது தாய் செல்லம்மாளும் (63) சேர்ந்து அம்பத்தூரில் உள்ள ஜெயந்தி வீட்டுக்கு வந்து மீதி தொகை ரூ.7 லட்சத்தை கேட்டனர்.

அப்போது ஏற்பட்ட தகராறில் ஜெயந்தியும், முருகனும் சேர்ந்து சண்முகவேலையும், செல்லம்மாளையும் இரும்பு கம்பியால் தாக்கினர். இதில் இருவருக்கும் பலத்த காயம் ஏற்பட்டது.

மேலும் செய்திகள்