தேவேந்திர குல வேளாளர்களை வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும்
தேவேந்திர குல வேளாளர்களை வேளாண் மரபினராக அறிவிக்க வேண்டும் என்று தமிழக மக்கள் முன்னேற்ற கழக மாநில மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தஞ்சாவூர்,
அகில இந்திய தேவேந்திர குல வேளாளர் முன்னேற்ற சங்கம், தமிழக மக்கள் முன்னேற்ற கழகம் ஆகியவை சார்பில் மாநில மாநாடு தஞ்சை புதிய பஸ் நிலையம் அருகே உள்ள மாநகராட்சி மைதானத்தில் நேற்று நடந்தது. இதற்கு தஞ்சை மாவட்ட செயலாளர் தியாக.காமராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட தலைவர் குருமூர்த்தி வரவேற்றார். இதில் அமைச்சர் துரைக்கண்ணு, எம்.பி.க்கள் வைத்திலிங்கம், பரசுராமன், மன்னார்குடி செண்டலங்கார ஜீயர் சுவாமிகள் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். தமிழக மக்கள் முன்னேற்ற கழக நிறுவன தலைவர் ஜான்பாண்டியன், பொதுச் செயலாளர் பிரிசில்லா பாண்டியன் ஆகியோர் மாநாட்டின் நோக்கம் குறித்து பேசினர்.
மாநாட்டில் கீழ்க்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
வேளாண்மையை பூர்வீக தொழிலாக கொண்ட மக்களான தேவேந்திர குல வேளாளர்கள், பட்டியல் வகுப்பில் இருந்து கொண்டு பெற்று வரும் நன்மைகளை விட இழந்த மாண்பு அதிகம். எனவே எஸ்.சி. பட்டியலை விட்டு வெளியேற்றி வேளாண் மரபினர் என்று தனிப்பிரிவின் கீழ் தேவேந்திர குல மக்களை கொண்டு வந்து, மக்கள் தொகை அடிப்படையில் இடஒதுக்கீடு வழங்க வேண்டும்.
குடும்பன், காலாடி, பண்ணாடி, கடையன், மூப்பன், பள்ளன், தேவேந்திர குலத்தான், வாதிரியான் போன்ற உட்பிரிவுகளை ஒன்றாக்கி தேவேந்திர குல வேளாளர் என்ற பெயரில் அழைக்க வகை செய்யும் அரசாணையை தமிழகஅரசு வெளியிட வேண்டும். தியாகி இமானுவேல் சேகரன் நினைவு நாளை அரசு விழாவாக அறிவிக்க வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
ஜான்பாண்டியன் மகன் டாக்டர் வியாங்கோ, மகள் நிவேதா, கடல்சார் ஆய்வாளர் பாலு, பள்ளர் வரலாற்று ஆய்வாளர் ரேணுகா, தமிழர் தாயகம் கட்சி தலைவர் செந்தில், நெல்லை நளினி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர். முன்னதாக ஜான்பாண்டியனுக்கு வீரவாளும், ஏர்கலப்பையும் நினைவு பரிசாக வழங்கப்பட்டது. முடிவில் மாநகர மாவட்ட செயலாளர் ராஜேஷ் கண்ணன் நன்றி கூறினார்.