கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாட்டம்
கிருஷ்ணகிரி மாவட்டத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப் பட்டது.
ஊத்தங்கரை,
கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரையில் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு முன்னாள் ஒன்றியக்குழு தலைவர் ஜெ.எஸ்.ஆறுமுகம் தலைமை தாங்கினார். ராமச்சந்திரன், ரவிச்சந்திரன், விஜயகுமார், முன்னாள் பேரூராட்சி தலைவர் பூபதி, முன்னாள் நகர தலைவர் முத்து, பாலகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
முன்னதாக ஊத்தங்கரை நான்குமுனை சந்திப்பில் உள்ள காமராஜர் உருவ சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. தொடர்ந்து அம்பேத்கர் நகரில் உள்ள ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளி மாணவர்களுக்கு இலவச நோட்டு புத்தகங்கள், கல்வி உபகரணங்கள் வழங்கப் பட்டது.
ஊத்தங்கரையில் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியின் சார்பில் காமராஜர் பிறந்த நாள் கொண்டாடப்பட்டது. இதற்கு மாவட்ட பொது செயலாளர் எம்.செல்வராஜ் தலைமை தாங்கினார். நகர தலைவர் ஜெய்சங்கர், தெற்கு வட்டார தலைவர் சென்னகேசவன், (வடக்கு) கோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதையொட்டி நான்கு முனை சந்திப்பில் உள்ள காமராஜர் சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி, பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கப்பட்டது. இதில் கிருஷ்ணன், குப்புசாமி, அசோகன், பொன்னுசாமி, அண்ணாமலை, பழனி உள்பட பலர் கலந்துகொண்டனர்.
ஊத்தங்கரை அரசு ஆண்கள் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு உதவி தலைமை ஆசிரியர் கணேசன் தலைமை தாங்கி மாணவர்களுக்கு கல்வி உபகரணங்களை வழங்கினார். ராயக்கோட்டை அரசு மகளிர் மேல்நிலைப்பள்ளியில் காமராஜர் பிறந்தநாளையொட்டி கல்வி வளச்சி நாளாக கொண்டாடப்பட்டது. நிகழ்ச்சிக்கு தலைமை ஆசிரியர் உமா தலைமை தாங்கினார். பெற்றோர் ஆசிரியர் கழக தலைவர் கோபால் முன்னிலை வகித்தார். சந்திரன் வரவேற்றார். முன்னாள் தலைமை ஆசிரியை ஞானசுந்தரி கலந்துகொண்டு அதிக மதிப்பெண்கள் பெற்ற மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கி பாராட்டினார். இதில் ஆசிரியர்கள் கஜலட்சுமி, சதானந்த், கோமதி மற்றும் மாணவிகள் கலந்துகொண்டனர். முடிவில் பிரபு நன்றி கூறினார்.
ஓசூர் காமராஜ் காலனியில் உள்ள நகராட்சி நடுநிலைப்பள்ளியில்(ஆங்கில வழி) காமராஜரின் பிறந்த நாள் விழா, கல்வி வளர்ச்சி நாளாக கொண்டாடப்பட்டது. தலைமை ஆசிரியர் பிரசாத் வரவேற்றார். நிகழ்ச்சியின்போது, காமராஜரின் படத்துக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. பின்னர் அனைவருக்கும் இனிப்பு வழங்கப்பட்டது. தொடர்ந்து, மாணவ, மாணவிகள் காமராஜர் குறித்தும், அவரது சாதனைகள் குறித்து பேசினார்கள்.
இந்த விழாவில், கிருஷ்ணகிரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் கமிட்டி தலைவர் முரளிதரன், ஓசூர் நகர தலைவர் நீலகண்டன், மாவட்ட துணைத்தலைவர் கீர்த்தி கணேஷ் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டு மாணவ, மாணவிகளுக்கு இலவச நோட்டு, புத்தகம் மற்றும் போட்டிகளில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசு வழங்கினார்கள். தொடர்ந்து காங்கிரஸ் கட்சி சார்பில், ஓசூர் அரசு ஆஸ்பத்திரியில் ரத்த தானம் வழங்கப்பட்டது. கட்சியினர் பலரும் கலந்து கொண்டு ரத்த தானம் செய்தனர். இதில், நகர துணைத்தலைவர் சந்துரு, மாவட்ட மகிளா காங்கிரஸ் தலைவி சரோஜம்மா, துணைத்தலைவி லட்சுமி, சாதிக்கான், சத்தார் உசேன், அயாஸ்கான் உள்பட பலர் கலந்து கொண்டனர்.