தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருடிய 2 பேர் கைது
நல்லாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் மோட்டார் சைக்கிளை மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர்.;
தர்மபுரி,
தர்மபுரி மதிகோன்பாளையம் போலீஸ் எல்லைக்குட்பட்ட நல்லாம்பட்டியை சேர்ந்தவர் விவசாயி தங்கவேல் (வயது 50). இவர் சம்பவத்தன்று தனது வீட்டின் முன்பு நிறுத்தி இருந்த மோட்டார் சைக்கிளை யாரோ மர்ம நபர்கள் திருடி சென்று விட்டனர். இது குறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் மதிகோன்பாளையம் போலீசார் விசாரணை நடத்தி வந்தனர். இதனிடையே தர்மபுரி ராமக்காள் ஏரிக்கரை அருகே போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்ட போது மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த 2 பேரை நிறுத்தி விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் இருசக்கர வாகன திருடர்கள் என்பது தெரிய வந்தது. விசாரணையில் அவர்கள் இருவரும் ஆந்திர மாநிலம் குப்பம் அருகே உள்ள மாதனூர் பகுதியை சேர்ந்த ஹரிகிருஷ்ணன் (20), வேலூரை சேர்ந்த மகேந்திரன் (35) என்பதும் தெரிய வந்தது. இதை தொடர்ந்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.