நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை கிளம்பியுள்ளது - ப.சிதம்பரம் பேச்சு
மானாமதுரையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா ப.சிதம்பரம் தலைமையில் கொண்டாடப்பட்டது.
மானாமதுரை,
மானாமதுரையில் உள்ள காங்கிரஸ் கட்சி அலுவலகத்தில் காமராஜர் பிறந்தநாள் விழா, முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் தலைமையில் கொண்டாடப்பட்டது. அப்போது அலுவலகத்தில் வைக்கப்பட்டு இருந்த காமராஜர் படத்திற்கு ப.சிதம்பரம் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
பின்னர் கட்சி நிர்வாகிகள் உடன் பூத் கமிட்டியில் சேர்க்கப்பட்ட விண்ணப்பங்களை பெற்றார். பின்னர் அவர் கூறும்போது, நாம் இன்னும் அதிகமாக உழைக்க வேண்டும். இன்னும் சில வாரங்களில் கிராமங்களில் சென்று மக்களிடத்தில் பேச வேண்டும். அதிக பூத் கமிட்டி உறுப்பினர்களை சேர்க்க வேண்டும். தற்போது காஷ்மீரில் இருந்து நாடு முழுவதும் மோடிக்கு எதிர்ப்பு அலை கிளம்பி உள்ளது. குறிப்பாக தமிழகத்தில் அதிகமாக எதிர்ப்பு இருந்து வருகின்றது என்றார்.
இதில் காரைக்குடி எம்.எல்.ஏ. கே.ஆர்.ராமசாமி, முன்னாள் எம்.எல்.ஏ. சுந்தரம், மாநில எஸ்.சி., எஸ்.டி. துணை தலைவர் டாக்டர் செல்வராஜ், நகர தலைவர் கணேசன், வட்டார தலைவர்கள் ஆரோக்கியதாஸ், கணேசன், முன்னாள் நிர்வாகி கிருஷ்ணன் உள்பட பலர் கலந்துகொண்டனர்.