சிவகங்கையில் தொடக்கப்பள்ளி ஆசிரியர்கள் ஆர்ப்பாட்டம்

சிவகங்கையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Update: 2018-07-15 22:30 GMT

சிவகங்கை,

தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் கூட்டணியின் சிவகங்கை மாவட்ட கிளை சார்பில் இடைநிலை ஆசிரியர்களின் ஊதிய முரண்பாட்டை நீக்கி, மத்திய அரசுக்கு இணையான ஊதியம் வழங்க வேண்டும், பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், நிறுத்தி வைக்கப்பட்ட மாவட்ட மாறுதல் கலந்தாய்வை மீண்டும் நடத்த வேண்டும், தொடக்க கல்வித்துறையை பள்ளிக்கல்வி துறையுடன் இணைத்ததை ரத்து செய்ய வேண்டும், சத்துணவு சாப்பிடும் மாணவர்கள் விவரத்தை தலைமை ஆசிரியர் குறுஞ்செய்தி அனுப்ப வேண்டும் என்ற உத்தரவை ரத்து செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி சிவகங்கை முதன்மைக்கல்வி அலுவலகம் முன்பு கவன ஈர்ப்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

 ஆர்ப்பாட்டத்திற்கு ஆசிரியர் கூட்டணி மாவட்ட தலைவர் ஆல்பர்ட் அசோக்குமார் தலைமை தாங்கினார். ஓய்வுபெற்றொர் பிரிவு நிர்வாகிகள் முத்தையா, ஆறுமுகம், பம்பையன் முன்னிலை வகித்தனர். மாநில செயற்குழு உறுப்பினர் அன்பரசு பிரபாகர், அமைப்புக்குழு மாவட்ட செயலாளர் ஸ்ரீரங்கராஜன் கோரிக்கைகளை விளக்கி பேசினர். முடிவில் மாவட்ட பொருளாளர் சிவக்குமார் நன்றி கூறினார்.

மேலும் செய்திகள்