பாளையங்கோட்டையில் பெண் டாக்டர் தங்கையுடன் மாயம் கதி என்ன? போலீசார் விசாரணை
பாளையங்கோட்டையில் பெண் டாக்டர் தனது தங்கையுடன் திடீரென்று மாயமாகி விட்டார். இருவரது கதி என்ன? என்பது குறித்து போலீசார் தேடிவருகின்றனர்.
நெல்லை,
புதுச்சேரி இலாகப்பேட்டை குறிச்சிநகர் 32-வது குறுக்கு தெருவை சேர்ந்தவர் அஜிஸ்தாஸ். இவருடைய மகள்கள் மைதிலி (வயது27), ராகவி (25). மைதிலி சித்தா டாக்டர் படித்து முடித்து பாளையங்கோட்டை மகாராஜநகரில் வீடு வாடகைக்கு எடுத்து தங்கி இருந்து பயிற்சி பெற்று வந்தார். அவருடைய தங்கை ராகவி அவருடன் தங்கி இருந்தார். ராகவி, முதுகலை என்ஜினீயரிங் பட்டப்படிப்பு படித்துள்ளார்.
இருவரும் நேற்று முன்தினம் காலையில் வீட்டை விட்டு சென்றவர்கள் இரவு வரை வீடு திரும்பவில்லை. இது குறித்து வீட்டின் உரிமையாளர், புதுச்சேரியில் உள்ள அவர்களின் தந்தை அஜிஸ்தாசிடம் செல்போனில் தொடர்பு கொண்டு தகவல் தெரிவித்தார். புதுச்சேரிக்கு ஏதும் சென்று உள்ளார்களா? என்றும் விசாரித்தார். ஆனால் அக்காள்- தங்கை இருவரும் புதுச்சேரிக்கும் செல்லவில்லை. மகள்கள் இருவரும் எங்கு சென்றார்கள் என்ற விவரம் தெரியாததால் அஜிஸ்தாஸ் அதிர்ச்சி அடைந்தார். உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் விசாரித்தார். அப்படி இருந்தும் அக்காள்- தங்கை இருவரது கதி என்ன? என்பது தெரியவில்லை.
இதுகுறித்து அஜிஸ்தாஸ் நெல்லை மருத்துவ கல்லூரி மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் நாராயணன் வழக்கு பதிவு செய்து காணாமல் போன அக்காள்- தங்கையை தேடிவருகிறார்.
பெண் டாக்டர் ஒருவர், தனது தங்கையுடன் மாயமான விவகாரம் பாளையங்கோட்டையில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.