கட்டுமான அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது

கட்டுமான அதிபரிடம் மிரட்டி பணம் பறித்த 5 பேர் கைது. அவர்களிடமிருந்து துப்பாக்கிகள், தோட்டாக்கள் பறிமுதல் செய்யப்பட்டன.

Update: 2018-07-14 23:50 GMT
மும்பை,

மும்பையை சேர்ந்த பிரபல கட்டுமான அதிபருக்கு சம்பவத்தன்று செல்போனில் அழைப்பு வந்தது. அப்போது, எதிர்முனையில் பேசியவர்கள், தன்னை தாதா குருசட்னாமின் கூட்டாளி என அறிமுகப்படுத்திக்கொண்டனர்.

பின்னர் உடனடியாக ரூ.60 லட்சம் தரவேண்டும், இல்லையெனில் கொலை செய்து விடுவதாக மிரட்டல் விடுத்தனர். இதனால் பயந்துபோன அவர் ரூ.5 லட்சம் வரை மிரட்டல் கும்பலுக்கு கொடுத்து உள்ளார். ஆனால் அந்த கும்பலினர் மீண்டும் பணம்கேட்டு மிரட்டல் விடுத்தனர்.

இதனால் விரக்தி அடைந்த அவர், போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இந்தநிலையில் பணம்கேட்டு மிரட்டல் விடுத்த கும்பல் மும்பை சென்டிரலில் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

இதையடுத்து போலீசார் அங்கு சென்று ஓட்டலில் பதுங்கி இருந்த அமோல் விச்சாரே, பரத் சோலங்கி, ராஜேஷ் அம்ரே, பிபின் தோத்ரே, தீபக் லோதியா ஆகிய 5 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.

இதில் அவர்கள் தான் கட்டுமான அதிபரிடம் பணம்கேட்டு மிரட்டியது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் கைது செய்யப்பட்டனர்.

அவர்களிடம் இருந்து 2 துப்பாக்கிகள், 5 தோட்டாக்கள் மற்றும் 11 செல்போன்களை போலீசார் பறிமுதல் செய்தனர். கைதான 5 பேரில் ஒருவர் மாநகராட்சி துப்புரவு ஊழியர் ஆவார். 

மேலும் செய்திகள்