பெருந்துறையில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 91 பழங்கால சிலைகள் கொண்டு செல்லப்பட்டன கோவில்களில் நடக்கும் திருட்டுகளை தடுக்க நடவடிக்கை
கோவில்களில் நடக்கும் திருட்டுகளை தடுக்க பெருந்துறையில் கட்டப்பட்டுள்ள பாதுகாப்பு அறைக்கு 91 பழங்கால சிலைகள் கொண்டு செல்லப்பட்டன.;
ஈரோடு,
இந்து கோவில்களில் உள்ள பழங்கால ஐம்பொன் சிலைகள் திருட்டுபோவதை தடுக்க தமிழக அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது. கிராமப்புறங்களில் உரிய பாதுகாப்பு இல்லாமல் உள்ள ஐம்பொன் சிலைகள் அருகில் உள்ள பெரிய கோவில்களில் பாதுகாப்பாக வைக்கப்பட்டன.
இந்தநிலையில் ஒவ்வொரு மாவட்டங்களிலும் ஐம்பொன் சிலைகளை வைப்பதற்காக நவீன பாதுகாப்பு வசதிகளுடன் கூடிய அறையை கட்டுவதற்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதன்படி ஈரோடு மாவட்டம் முழுவதும் உரிய பாதுகாப்பு இல்லாமல் உள்ள பழங்கால சிலைகளை ஒரே இடத்தில் பாதுகாப்பாக வைக்கும் வகையில் பெருந்துறையில் உள்ள சோழீஸ்வரர் கோவில் வளாகத்தில் பாதுகாப்பு அறை கட்டப்பட்டது.
சிறந்த பாதுகாப்பு வசதிகளுடன் புதிதாக கட்டப்பட்ட அறை திறக்கப்பட்டு உள்ளது. இதைத்தொடர்ந்து மாவட்டத்தின் பல்வேறு இடங்களில் உள்ள பழங்கால சிலைகளை பாதுகாப்பு அறைக்கு கொண்டு சென்று வைக்கும் நடவடிக்கையில் இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகிறார்கள்.
நசியனூரில் உள்ள மூவேந்தரீஸ்வரர் ஆதிநாராயண பெருமாள், மதுரகாளியம்மன் ஆகிய கோவில்களுக்கு சொந்தமான பழங்கால சிலைகள் பாதுகாப்பு கருதி சுமார் 40 ஆண்டுகளுக்கு முன்பு ஈரோடு ஆருத்ர கபாலீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்டு இருந்தது. இதில் சந்திரசேகர், மரகதவள்ளி, வள்ளி, சுப்பிரமணியன், தெய்வானை, ஸ்ரீதேவி, ஆதிநாராயண பெருமாள், பூதேவி, மதுரகாளியம்மன் ஆகிய 9 சிலைகள் வைக்கப்பட்டு இருந்தன. இந்த சிலைகளை பெருந்துறையில் உள்ள பாதுகாப்பு அறைக்கு இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் நேற்று முன்தினம் போலீஸ் பாதுகாப்புடன் கொண்டு சென்றனர்.
இதுகுறித்து இந்து சமய அறநிலையத்துறை அதிகாரிகள் கூறியதாவது:-
ஈரோடு மாவட்டத்தில் உள்ள கோவில்களுக்கு சொந்தமான பழங்கால சிலைகளை பாதுகாப்பாக வைப்பதற்காக பெருந்துறை சோழீஸ்வரர் கோவிலில் பாதுகாப்பு அறை கட்டப்பட்டு உள்ளது. அங்கு சுமார் 250 சிலைகளை வைக்க முடியும். அறையின் கதவு வங்கியின் பாதுகாப்பு பெட்டகத்தைபோல் திடமானதாக பொருத்தப்பட்டு உள்ளது. இதில் உதவி ஆணையாளரிடம் ஒரு சாவியும், கோவில் நிர்வாகத்தினரிடம் ஒரு சாவியும் உள்ளன. இந்த 2 சாவிகளை பயன்படுத்தி கதவை திறக்க முடியும். மேலும், 24 மணிநேரமும் துப்பாக்கி ஏந்திய போலீசார் 2 பேர் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
பாதுகாப்பு அறையில் கண்காணிப்பு கேமராக்கள், அபாய ஒலி ஒலிக்கும் கருவி உள்ளிட்ட பாதுகாப்பு அம்சங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. 15 கோவில்களுக்கு சொந்தமான 91 பழங்கால சிலைகள் இதுவரை பாதுகாப்பு அறையில் வைக்கப்பட்டு உள்ளன. மேலும், பல்வேறு கோவில்களின் சிலைகள் கொண்டு வந்து வைக்கும் பணி தொடர்ந்து நடந்து வருகிறது. அந்தந்த கோவில்களில் திருவிழா நடக்கும்போது சாமி சிலைகள் கொண்டு செல்லப்பட்டு வழிபாடு நடத்தப்படும்.
இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.