சம்பளம் வழங்கக்கோரி அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் தர்ணா

பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி புதுவை அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் தர்ணா போராட்டம் நடந்தது.

Update: 2018-07-14 22:15 GMT

புதுச்சேரி,

புதுவை அரசு நிதிஉதவி பெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் கூட்டமைப்பு சார்பில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று காலை மாதா கோவில் வீதியில் தர்ணா போராட்டம் நடந்தது. போராட்டத்திற்கு கூட்டமைப்பு தலைவர் ராஜேந்திரன் தலைமை தாங்கினார். இதில் தி.மு.க. வடக்கு மாநில அமைப்பாளர் எஸ்.பி.சிவக்குமார் கலந்து கொண்டு பேசினார்.

தர்ணா போராட்டத்தில் கூட்டமைப்பின் துணைத்தலைவர்கள் ஆல்பர்ட் மார்ட்டின், அந்தோணிசாமி, செயலாளர் மார்ட்டின் கென்னடி, ஓய்வூதியதாரர்கள் சங்க தலைவர் ஸ்டாலின், சீத்தாலட்சுமி, வின்சென்ட் உள்பட பலர் கலந்து கொண்டனர். போராட்டத்தில், நிலுவையில் உள்ள 5 மாத சம்பளம் மற்றும் பென்‌ஷனை உடனடியாக வழங்க வேண்டும். 7–வது ஊதியக்குழுவின் பரிந்துரைகளை அரசு நிதி உதவிபெறும் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்களுக்கும் அமல்படுத்தவேண்டும் உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தப்பட்டன.

மேலும் செய்திகள்