முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியில் சேர மாணவர்கள் விண்ணப்பிக்கலாம் அதிகாரி தகவல்

முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதியில் சேர்ந்து பயிற்சி பெற தகுதியுடைய மாணவ- மாணவிகள் விண்ணப்பிக்கலாம் என கரூர் விளையாட்டுத்துறை அதிகாரி சாந்தி தெரிவித்து உள்ளார்.

Update: 2018-07-14 22:15 GMT
கரூர்,

கரூர் மாவட்ட விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் அலுவலர் சாந்தி வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையத்தின் மூலமாக பள்ளிகளில் பயிலும் சிறுவர்- சிறுமிகளுக்கு விளையாட்டு துறையில் சாதனைகள் படைப்பதற்கு ஏற்ப நல்ல பயிற்சி, தங்கும் இட வசதி மற்றும் சத்தான உணவுடன் கூடிய 5 முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகள் சென்னை, திருச்சி மற்றும் திருநெல்வேலி உள்ளிட்ட இடங்களில் செயல்பட்டு வருகின்றன. சிறுமிகளுக்கான முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதி சென்னை மற்றும் ஈரோடு ஆகிய இடங்களில் செயல்பட்டு வருகின்றன.

இந்த முதன்மை நிலை விளையாட்டு மைய விடுதிகளில் உள்ள பின் வரும் காலியாக உள்ள விளையாட்டுகளில் பயிற்சி பெற்று சிறந்த விளையாட்டு வீரர், வீராங்கனையாக விளங்குவதற்கு 6, 7, 8-ம் வகுப்புகளில் பயிலும் மாணவ- மாணவிகளுக்கு 2-வது கட்டமாக மாநில அளவிலான தேர்வு வருகிற 18-ந் தேதி அன்று காலை 8 மணிக்கு நடைபெற உள்ளது. அன்றைய தினம்

டேக் வாண்டோ போட்டியில் ஜவஹர்லால் நேரு விளையாட்டரங்கில் ஆண்களுக்கும், ஜிம்னாஸ்டிக்ஸ் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், மேசைப்பந்து பெண்களுக்கும், நீச்சல் ஆண்களுக்கும், தடகளம் ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், நேரு பூங்கா விளையாட்டு வளாகம் சென்னையில் இறகுப்பந்து ஆண்கள் மற்றும் பெண்களுக்கும், டென்னிஸ் ஆண்களுக்கு டென்னிஸ் விளையாட்டரங்கம் நுங்கம்பாக்கம் சென்னையில் நடைபெற உள்ளது.

எனவே கரூர் மாவட்டத்தில் விளையாட்டில் சிறந்து விளங்கும் மற்றும் ஆர்வம் உள்ள மாணவ- மாணவிகள் 2018-2019-ம் ஆண்டு சேர்க்கைக்கு உரிய படிவங்களை www.sdat.tn.gov.in என்ற இணையதள முகவரியில் பதிவிறக்கம் செய்து கொள்ளலாம். தேசிய மற்றும் மாநில அளவில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு முன்னுரிமை வழங்கப்படும். பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை வருகிற 18-ந் தேதி தேர்வு அன்று காலை 8 மணிக்குள் நேரில் மாநிலத் தேர்வு மையத்தில் சமர்ப்பிக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறியுள்ளார். 

மேலும் செய்திகள்