அரசின் சாதனைகளை விளக்கும் ஜெயலலிதா பேரவையின் சைக்கிள் பேரணி, முதல்–அமைச்சர் இன்று மாலை தொடங்கி வைக்கிறார்

அரசின் சாதனைகளை விளக்கும் ஜெயலலிதா பேரவையின் சைக்கிள் பேரணியை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று மாலை தொடங்கி வைக்கிறார்.

Update: 2018-07-14 21:45 GMT

மதுரை,

ஜெயலலிதா பேரவை சார்பில் மதுரையில் ஆயிரம் பேர் பங்கு கொள்ளும் தமிழக அரசின் சாதனைகளை விளக்கும் சைக்கிள் பேரணி இன்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை 4 மணிக்கு நடக்கிறது. இதனை முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர். இதுகுறித்து ஜெயலலிதா பேரவை மாநில செயலாளர் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் நிருபர்களிடம் கூறியதாவது:–

மக்கள் மத்தியில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் நடைபெற்று வரும் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்களை எடுத்து கூறும் வகையிலும், எதிர்கட்சிகளின் பொய் பிரசாரத்தை முறியடிக்கும் வகையிலும் ஜெயலலிதா பேரவை சார்பில் தமிழகத்தில் உள்ள 32 வருவாய் மாவட்டங்களில் கிராமம், கிராமமாக நடைபயணமாக, சைக்கிள் பேரணியாக சென்று பிரசாரம் மேற்கொள்வது என தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த சாதனை விளக்க சைக்கிள் பேரணியை இன்று (ஞாயிற்றுக்கிழமை) பாண்டிகோவில் ரிங்ரோட்டில் உள்ள அம்மா திடலில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்–அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோர் தொடங்கி வைக்கிறார்கள். முதற்கட்டமாக மாவட்டத்தில் உள்ள 10 சட்ட மன்ற தொகுதிகளில் இந்த சாதனை விளக்க சைக்கிள் பேரணி நடைபெறும். இந்த பயணத்தில் கிராமப்பொதுமக்கள், இளைஞர்கள், தாய்மார்களை நேரில் சந்தித்து, அந்த கிராமத்திலேயே தங்கி அவர்கள் சொல்கின்ற கோரிக்கைகளை கேட்டு நடவடிக்கை மேற்கொள்வோம்.

வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் அ.தி.மு.க. 100 சதவீதம் வெற்றி பெற வேண்டும் என்பதற்காக ஜெயலலிதா பேரவை இந்த பயணத்தை மக்களிடத்தில் முன்னெடுத்து செல்கிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் இதுபோன்ற சைக்கிள் பேரணி நடைபெற உள்ளது. இன்று மாலை அம்மா திடலுக்கு வரும் முதல்–அமைச்சருக்கு பேரவை சார்பில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. இதில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொள்கிறார்கள்.

இவ்வாறு அவர் தெரிவித்தார்.

மதுரை உலக தமிழ்ச்சங்கத்தில் மனிதவள மேலாண்மை 4–வது மாநாடு நடந்தது. இதில் அமைச்சர் ஆர்.பி.உதயகுமார் கலந்து கொண்டு குத்துவிளக்கு ஏற்றி தொடங்கி வைத்தார். இதில் பல்வேறு நிறுவனங்களை சேர்ந்த மனித வள ஆலோசகர்கள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்