திருவாடானை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த கோவில் பூசாரி பலி
திருவாடானை அருகே பஸ்சில் இருந்து தவறி விழுந்த கோவில் பூசாரி பரிதாபமாக உயிரிழந்தார்.
தொண்டி,
திருவாடானை தாலுகா,சிறுகம்பையூர் ஊராட்சி மயிலாடுவயல் கிராமத்தைச்சேர்ந்தவர் பூசத்துரை (வயது45). இவர் இக்கிராமத்தில் உள்ள பெருமாள் கோவிலில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். இவர் அரசு டவுன் பஸ்சில் சென்றபோது என்.எம்.மங்கலம் தோப்பு பஸ் நிறுத்தத்தில் இறங்க பஸ்சை நிறுத்துமாறு கண்டக்டரிடம் கூறியுள்ளார். பஸ் நிற்காமல் சென்றதால் அதில் இருந்து இறங்கும்போது தவறி கீழே விழுந்த பூசத்துரை படுகாயம் அடைந்தார். பின்னர் அவர் சிகிச்சைக்காக ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லும் வழியில் பரிதாபமாக உயிரிழந்தார்.
இதுகுறித்து தகவல் அறிந்த எஸ்.பி.பட்டினம் போலீஸ் சப்–இன் ஸ்பெக்டர் சிலைமணி மற்றும் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.