நியூட்ரினோ ஆய்வு குறித்து போலி அறிவியல் வாதம் - விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் குற்றச்சாட்டு
மக்கள் மனதை திசை திருப்புவதற்காக நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்து போலியான அறிவியல் வாதத்தை சிலர் செய்வதாக விஞ்ஞானி வெங்கடேஸ்வரன் குற்றம்சாட்டினார்.
தேனி,
நியூட்ரினோ ஆய்வு திட்டம் குறித்து விஞ்ஞான பிரசார நிறுவனத்தின் விஞ்ஞானியான வெங்கடேஸ்வரன் தேனியில் நிருபர்களிடம் கூறியதாவது:-
சூரியனில் இருந்தும், முதிர்ச்சி அடைந்து வெடித்து சிதறும் விண்மீன்களில் இருந்தும் நியூட்ரினோ துகள்கள் வெளியேறுகின்றன. மனிதர்கள் மட்டும் இன்றி உயிர்வாழும் அத்தனை உயிரினங்களில் இருந்தும் நியூட்ரினோக்கள் வெளிப்படுகின்றன. நியூட்ரினோ என்பது மந்தமாக வினைபுரியும் துகள். இதை ஆய்வு செய்வது எளிதல்ல. பிரபஞ்சத்தில் 2-வது அதிக அளவில் உள்ள துகள் இது.
எடை கூடியது, எடை குறைவானது, நடுத்தரமானது என 3 வகையான நியூட்ரினோ உள்ளன. அதை கண்டறிய இந்த ஆய்வு பயன்படும். இதற்கு எதிரான துகள்கள் என்ன என்பதை கண்டறியவும் இந்த ஆய்வு உதவும். ஊட்டி அருகே சிங்காரா மலைப்பகுதியில் தான் முதலில் இந்த ஆய்வு செய்வதாக இருந்தது. இங்கு இடம் தேர்வு செய்த நிலையில், அப்பகுதியில் புலிகள் காப்பகம் வருவதாக தெரிவிக்கப்பட்டது. புலிகள் காப்பகம் அமையும் இடத்தில் எந்த கட்டுமானமும் செய்ய முடியாது என்பதால் அங்கிருந்து ஆய்வுக்கூடம் அமைக்கும் திட்டம் தேனிக்கு மாற்றப்பட்டது.
இந்த திட்டம் குறித்து போலியான அறிவியல் வாதத்தை சிலர் தெரிவித்து மக்கள் மனதை திசை திருப்புவதற்கு முயற்சி செய்கின்றனர். எனவே மக்களிடம் இந்த திட்டம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படும். இதற்காக அறிவியல் ஆசிரியர்களுக்கு முதற்கட்டமாக இந்த திட்டம் குறித்து விளக்கம் அளிக்க திட்டமிட்டுள்ளோம்.
இங்கு அணுக்கழிவுகள் எதுவும் பயன்படுத்தப்போவது இல்லை. முதல் முறை மாசு கட்டுப்பாட்டு வாரியத்திடம் விண்ணப்பம் அளித்த போது அதில் அணுக்கழிவு குறித்து எதுவும் குறிப்பிடப்படவில்லை. மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் மூலம் அளித்த பதிலில் தான் தவறுதலாக அணு ஆராய்ச்சி குறித்து குறிப்பிடப்பட்டது. பின்னர் அதை சுட்டிக்காட்டி பின்பு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் சரி செய்து கொண்டார்கள். கோர்ட்டில் அதுபோன்ற தவறான அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை. அவ்வாறு தாக்கல் செய்ததாக கூறுவது பொய்யான தகவல். இவ்வாறு அவர் கூறினார்.