தனுஷ்கோடி கடற்கரையில் இறந்து கரை ஒதுங்கிய ஆமைகள்

ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் மற்றும் கம்பிப்பாடுக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதிகளில் 2 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தன.

Update: 2018-07-14 22:00 GMT

ராமேசுவரம்,

ராமநாதபுரம் மாவட்டம் மன்னார் வளைகுடா கடல் பகுதியில் பச்சைஆமை,தோணி,பெருந்தலைஆமை உள்ளிட்ட 5 வகையான ஆமைகள் உள்ளன. இந்நிலையில் ராமேசுவரம் அருகே உள்ள தனுஷ்கோடி எம்.ஆர்.சத்திரம் மற்றும் கம்பிப்பாடுக்கு இடைப்பட்ட கடற்கரை பகுதிகளில் வெவ்வேறு இடங்களில் 2 ஆமைகள் இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்தன.கரை ஒதுங்கி கிடந்த ஆமைகள் சுமார் 3 அடி நீளமும் 50 கிலோ எடையும் கொண்டதாக இருந்தன.

இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த ஆந்த ஆமைகளின் உடல்களை கடற் கரையில் சுற்றி திரிந்த நாய்கள் கடித்து சாப்பிட்டு கொண்டிருந்தன. இது பற்றி மீனவர்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர்.அதை தொடர்ந்து வனச்சரகர் சதீஷ் தலைமையிலான வனத்துறை அதிகாரிகள் அங்கு விரைந்து சென்று இறந்த நிலையில் கரை ஒதுங்கி கிடந்த 2 ஆமைகளையும் கடற்கரையிலேயே பெரிய குழி தோண்டி புதைத்தனர்.

மேலும் செய்திகள்