“விபசாரத்தில் கிடைத்த பணத்தை பங்கு வைக்கும் தகராறில் தீர்த்து கட்டினோம்” கோர்ட்டில் சரண் அடைந்த 3 பேர் பரபரப்பு வாக்குமூலம்
விபசாரத்தில் கிடைத்த பணத்தை பங்கு வைக்கும் தகராறில் தீர்த்துக் கட்டினோம் என்று நெல்லை கார் டிரைவர் கொலையில் கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
சாத்தான்குளம்,
விபசாரத்தில் கிடைத்த பணத்தை பங்கு வைக்கும் தகராறில் தீர்த்துக் கட்டினோம் என்று நெல்லை கார் டிரைவர் கொலையில் கைதான 3 பேர் பரபரப்பு வாக்குமூலம் அளித்துள்ளனர்.
கார் டிரைவர் கொலை
பாளையங்கோட்டை அன்பு நகரைச் சேர்ந்தவர் சண்முகம். இவருடைய மகன் மகிபன் என்ற ராஜா (வயது 30). இவர் சொந்தமாக கார் வாங்கி வாடகைக்கு ஓட்டி வந்தார். இவர் கடந்த 28-ந்தேதி இரவில் சாத்தான்குளத்தை அடுத்த பன்னம்பாறை விலக்கு அருகில் காட்டு பகுதியில் அடித்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் பிணமாக கிடந்தார். இதுகுறித்து சாத்தான்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.மகிபன் கொலை வழக்கு தொடர்பாக பாளையங்கோட்டை மனகாவலம்பிள்ளை நகர் வடக்கு கென்னடி தெருவைச் சேர்ந்த விஜயபிரகாஷ் (24), நெல்லை ராஜவல்லிபுரம் சாஸ்தா கோவில் தெருவைச் சேர்ந்த வினோத் (25), பாளையங்கோட்டை சமாதானபுரம் சத்யா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (24) ஆகிய 3 பேர் நாங்குநேரி கோர்ட்டில் சரண் அடைந்தனர்.
வாக்குமூலம்
அவர்கள் 3 பேரும் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். மகிபன் கொலை வழக்கில் தலைமறைவாக உள்ள மேலப்பாளையத்தைச் சேர்ந்த ரஞ்சித்தை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில் சரண் அடைந்த விஜயபிரகாஷ், வினோத், மணிகண்டன் ஆகிய 3 பேரையும் சாத்தான்குளம் போலீசார் காவலில் எடுத்து விசாரித்தனர்.
அப்போது அவர்கள் 3 பேரும் போலீசாரிடம் அளித்த பரபரப்பு வாக்குமூலம் விவரம் வருமாறு:-
விபசார புரோக்கர்
மகிபன் வாடகை கார் டிரைவராக வேலை செய்ததோடு, விபசார புரோக்கராகவும் இருந்தார். அவருடன் எங்களுக்கு பழக்கம் ஏற்பட்டது. பின்னர் மகிபனுக்கு உதவியாக நாங்களும் இருந்தோம். விபசார தொழிலில் கிடைக்கும் பணத்தை பங்கு வைப்பதில் எங்களுக்குள் தகராறு ஏற்பட்டது. மகிபன் எங்களுக்கு குறைவான தொகையை தருவார். இது எங்களுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தியது.
கடந்த 27-ந்தேதி ரஞ்சித், மகிபனின் வீட்டுக்கு சென்று, காரில் வெளியில் செல்வோம் என்று கூறி அழைத்து வந்தார். பின்னர் நாங்கள் 3 பேரும் மகிபனின் காரில் ஏறிக் கொண்டோம். தொடர்ந்து அனைவரும் ஒன்றாக அமர்ந்து மது குடித்தோம்.
பணம் தராததால்...
அப்போது நாங்கள் மகிபனிடம் பணம் கேட்டோம். ஆனால் மகிபன் பணம் தர மறுத்தார். இதனால் ஆத்திரம் அடைந்த நாங்கள் மகிபனை தாக்கினோம். அவர் இறந்து விட்டார். பின்னர் மகிபனின் காரிலேயே அவரது உடலை கொண்டு சென்று, சாத்தான்குளம் அருகே காட்டு பகுதியில் வீசி விட்டு சென்றோம்.
பின்னர் நாங்கள் கன்னியாகுமரியில் தலைமறைவாக இருந்தோம். இதற்கிடையே போலீசார் எங்க