சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் பி.ஆர்.பாண்டியன் பேட்டி
அடுத்தமாதம் 15-ந் தேதிக்குள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும் என்று பி.ஆர்.பாண்டியன் கூறினார்.
திருத்துறைப்பூண்டி,
திருத்துறைப்பூண்டியில் தமிழக அனைத்து விவசாயிகள் சங்கங்களின் ஒருங்கிணைப்புக்குழு தலைவர் பி.ஆர்.பாண்டியன், நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தமிழ்நாட்டில் 7 ஆண்டுகளாக தொடர்ந்து காவிரி டெல்டாவில் குறுவை சாகுபடியை முற்றிலும் இழந்து விட்டோம். இந்தநிலையில் நடப்பாண்டு காவிரி ஆணையம் அமைக்கப்பட்டு கடந்த 2-ந்தேதி நடைபெற்ற முதல் கூட்டத்தில் ஜூலை மாதத்திற்கான 31 டி.எம்.சி. தண்ணீர் விடுவிக்க உத்தரவிட்டது. அதனை தொடர்ந்து காவிரி நீர் பங்கீட்டு ஒழுங்காற்றுக்குழு கூட்டம் கடந்த 5-ந் தேதி நடந்து முடிந்துள்ளது. அக்கூட்டத்தில் தண்ணீர் திறப்பது குறித்து எந்த முடிவும் வெளியாகததால் ஏமாற்றம் அடைந்துள்ளனர். கர்நாடக அணைகளில் தண்ணீர் திறப்பது யார்? என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
அணைகளில் தண்ணீர் அளவை கணக்கிடுவது, கண்காணிப்பு உள்ளிட்ட நிர்வாக அதிகாரம் தன் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வரப்பட்டுள்ளதா? என்பதை தெளிவுபடுத்த வேண்டும். தன்னாட்சி அதிகாரம் கொண்ட ஆணையம் செயல்பாட்டிற்கு வந்துள்ளதால் தமிழக விவசாயிகளுக்கு ஏற்படும் இழப்புகளுக்கும் ஆணையமே பொறுப்பேற்க வேண்டும். உபரி நீர் மட்டுமே தமிழகத்திற்கு வழங்க முடியும் என்ற கர்நாடகாவின் உள்நோக்கத்திற்கு ஆணையம் துணை போய் விடக்கூடாது. உரிய நீரை உரிய காலத்தில் திறக்கப்படுவதை தான் கணக்கில் கொள்ள வேண்டும். அடுத்த மாதம் (ஆகஸ்டு) 15-ந்தேதிக்குள் சம்பா சாகுபடிக்கு தண்ணீர் திறக்கப்படுவதை ஆணையம் உறுதிப்படுத்த வேண்டும்.
குடிமராமத்து பணிகளில் ஊழல் முறைகேடுகளின்றி உரிய காலக்கெடுவுக்குள் பணிகள் முழுமையும் நிறைவேற்றுவதை கண்காணிக்க அரசு துறை செயலாளர்களை நியமிக்க வேண்டும் என்று தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை நேரிலும், கடிதம் மூலமும் வலியுறுத்தி வந்தோம். இதனை ஏற்று 7 ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை நியமித்து உள்ளதை வரவேற்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.
பேட்டியின்போது மாநில துணை செயலாளர் செந்தில்குமார், மாவட்ட கவுரவ தலைவர் செல்வராஜ் ஆகியோர் உடன் இருந்தனர்.