வீடுகளில் கொள்ளையடித்து வந்த அக்காள்-தங்கை கைது போலீசார் பிடிக்க சென்றபோது மேலாடையை களைந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு

வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை யடித்து வந்த அக்காள், தங்கை கைது செய்யப்பட்டனர். முன்னதாக அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, மேலாடையை களைந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

Update: 2018-07-05 22:30 GMT
மும்பை, 

வீடுகளில் பூட்டை உடைத்து கொள்ளை யடித்து வந்த அக்காள், தங்கை கைது செய்யப்பட்டனர். முன்னதாக அவர்களை போலீசார் பிடிக்க முயன்றபோது, மேலாடையை களைந்து ரகளையில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நகைகள், பணம் கொள்ளை

மும்பை போரிவிலி கஸ்தூர்பா மார்க் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பில் சம்பவத்தன்று வீடுகளின் பூட்டை உடைத்து நகைகள், பணம் கொள்ளை போனது. இது தொடர்பாக பாதிக்கப்பட்டவர்கள் சம்பவம் குறித்து போலீசில் புகார் அளித்தனர். இந்த புகார் தொடர்பாக போலீசார் வழக்கு பதிவு செய்து, சம்பவம் நடந்த இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதில், 2 பெண்கள் கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து போலீசார் கண்காணிப்பு கேமராவில் பதிவான பெண்களின் புகைப்படங்களை அனைத்து போலீஸ் நிலையத்திற்கும் அனுப்பி வைத்தனர்.

மேலாடையை களைந்ததால் பரபரப்பு

இந்தநிலையில் மலாடு டைமண்ட் மார்க்கெட் அருகே போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது, மேற்படி கொள்ளை சம்பவத்தில் தொடர்புடைய 2 பெண்கள் அங்கு சுற்றித்திரிந்தது தெரியவந்தது. இதையடுத்து ேபாலீசார் அந்த பெண்களை பிடிக்க முயன்றனர். அப்போது, அதில் ஒரு பெண் தனது மேலாடையை கழற்றி தன்னை மானபங்கம் செய்வதாக கூறி, ரகளையில் ஈடுபட்டார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

இதனைக்கண்ட பொதுமக்கள் அந்த பெண்ணுக்கு உதவிக்கு வந்ததால் போலீசார் செய்வதறியாமல் திகைத்தனர். இதன்பின்னர் பெண் போலீசாரை அங்கு உடனடியாக வரவழைத்து அந்த 2 பெண்களையும் பிடித்து தின்தோஷி போலீஸ் நிலையத்திற்கு கொண்டு சென்றனர்.

அக்காள், தங்கை கைது

அங்கு நடத்திய விசாரணையில், அவர்கள் ஜோகேஸ்வரியை சேர்ந்த சரிதா மற்றும் குர்லாவை சேர்ந்த சுஜாதா என்பது தெரியவந்தது. இருவரும் அக்காள், தங்கை ஆவர்.

இவர்கள் ஜூகு, சாந்தாகுருஸ், வன்ராய், கார், காட்கோபர் போன்ற இடங்களில் வீடு புகுந்து கொள்ளையடித்து வந்தது தெரியவந்தது.

இதையடுத்து போலீசார் அவர்களை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

மேலும் செய்திகள்