வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த அரசு பெண் ஊழியரை தாக்கி 5 பவுன் சங்கிலி பறிப்பு
திருவோணம் அருகே வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்த அரசு பெண் ஊழியரை தாக்கி 5 பவுன் சங்கிலியை பறித்து சென்ற டவுசர் கொள்ளையர்களை போலீசார் தேடி வருகிறார்கள்.
ஒரத்தநாடு,
தஞ்சை மாவட்டம் திருவோணம் அருகே உள்ள ராஜாளிவிடுதி கிராமத்தை சேர்ந்தவர் காசிநாதன். இவருடைய மனைவி அஞ்சேஸ்வரி (வயது45). இவர் திருவோணத்தில் உள்ள சார் பதிவாளர் அலுவலகத்தில் அலுவலக உதவியாளராக பணியாற்றி வருகிறார். நேற்று அதிகாலை அஞ்சேஸ்வரி தனது வீட்டு வாசலை சுத்தம் செய்து கொண்டிருந்தார். அப்போது அங்கு டவுசர் மற்றும் பனியன் அணிந்து வந்த 3 வாலிபர்கள் திடீரென அஞ்சேஸ்வரி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் சங்கிலியை பறித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த அஞ்சேஸ்வரி தனது சங்கிலியை பிடித்துக்கொண்டு கொள்ளையர்களுடன் போராடினார். இதனால் ஆத்திரமடைந்த கொள்ளையர்கள் அஞ்சேஸ்வரியை சரமாரியாக தாக்கி அவரை கீழே தள்ளி சங்கிலியை பறித்துக்கொண்டு தப்பி ஓடி விட்டனர். தாக்கப்பட்ட அஞ்சேஸ்வரி பட்டுக்கோட்டை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இது குறித்த புகாரின் பேரில் திருவோணம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சங்கிலியை பறித்து சென்ற டவுசர் கொள்ளையர்களை தேடி வருகின்றனர். சங்கிலியை பறித்து சென்றவர்கள் கருப்பு நிற டவுசரும், அதே கலரில் பனியன் மற்றும் காலில் ஷூ அணிந்திருந்தனர்.
இவர்கள் அதே பகுதியில் மேலும் சில வீடுகளின் கதவுகளை உடைத்து கொள்ளை முயற்சியில் ஈடுபட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
அரசு பெண்ஊழியரை தாக்கி 5 பவுன் சங்கிலியை டவுசர் கொள்ளையர்கள் பறித்து சென்ற சம்பவம் ராஜாளிவிடுதி பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.