டீக்கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேர் கைது

டீக்கடையில் இல்லாத பொருட்களை கேட்டு கடைக்காரரை அரிவாளால் வெட்டிய 2 பேரை போலீசார் கைது செய்தனர்.

Update: 2018-07-05 23:00 GMT
பேரையூர்,


பேரையூர் அருகே உள்ளது அழகுரெட்டிபட்டி. இந்த ஊரை சேர்ந்தவர் ஜெயராமன் (வயது65). இவர், இங்கு டீக்கடை வைத்து நடத்தி வருகிறார். இதே ஊரை சேர்ந்த பெருமாள் என்பவர் டீக்கடைக்கு சென்று கடையில் இல்லாத பொருட்களை கேட்டுள்ளார்.

இதனால் ஏற்பட்ட தகராறில் பெருமாள், முத்துராமன், சின்னச்சாமி ஆகிய 3 பேரும் சேர்ந்து ஜெயராமனை தரக்குறைவாக பேசி, கம்பியால் தாக்கி அரிவாளால் வெட்டினார்களாம். இதில் அவர் படுகாயம் அடைந்து அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகிறார்.


இதுகுறித்து அவர் கொடுத்த புகாரின் பேரில் பெருமாள் உள்பட 3 பேர் மீது சேடபட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து முத்துராமன், சின்னச்சாமியை கைது செய்தனர். பெருமாளை தேடிவருகின்றனர்.

மேலும் செய்திகள்