பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்க முயற்சி: கல்லூரி மாணவர்கள் ஆர்ப்பாட்டம்

பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்க மத்திய அரசு முயற்சி செய்து வருவதை கண்டித்து திருவாரூரில் கல்லூரி மாணவர்கள், வகுப்புகளை புறக்கணித்து விட்டு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.;

Update: 2018-07-05 22:45 GMT
திருவாரூர்,

யு.ஜி.சி. எனப்படும் மத்திய பல்கலைக்கழக மானியக்குழு, நாடு முழுவதும் பல்கலைக்கழகங்களை நிறுவி பல கோடி ரூபாய் செலவில் உயர்கல்வியை மேம்படுத்தி வருகிறது.

இந்த நிலையில் மத்திய அரசு, கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு உயர் கல்வியை விற்கும் நோக்கில் பல்கலைக்கழக மானியக்குழுவை கலைக்க முயற்சி செய்வதாக மாணவர்கள் அமைப்பினர் குற்றம் சாட்டி வருகிறார்கள். இதை கண்டித்தும், இந்த முயற்சியை கைவிட கோரியும் இந்திய மாணவர் சங்கத்தினர் கடந்த 2-ந் தேதி ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

அதன் தொடர்ச்சியாக திருவாரூரில் உள்ள திரு.வி.க. அரசு கல்லூரி மாணவர்கள் நேற்று வகுப்புகளை புறக்கணித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்துக்கு இந்திய மாணவர் சங்க கிளை தலைவர் சிவபாலன் தலைமை தாங்கினார். கிளை செயலாளர் ஜோஸ்வா முன்னிலை வகித்தார்.

மாவட்ட செயலாளர் பிரகாஷ், கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். இதில் நகர செயலாளர் சுர்ஜித், ஒன்றிய செயலாளர் மதன் உள்பட பலர் கலந்து கொண்டு, மத்திய அரசை கண்டித்து கோஷங்களை எழுப்பினர். 

மேலும் செய்திகள்