துணை ஜனாதிபதி இன்று புதுவை வருகை பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து போலீஸ் அதிகாரிகள் ஆலோசனை
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று(வெள்ளிக்கிழமை) புதுவை வருகிறார். இதனை முன்னிட்டு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமையில் போலீஸ் அதிகாரிகளின் ஆலோசனைக் கூட்டம் நடந்தது.
புதுச்சேரி,
துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு இன்று(வெள்ளிக்கிழமை) காலை தனி விமானம் மூலம் புதுவை விமான நிலையத்திற்கு வருகிறார். அவருக்கு அங்கு சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட உள்ளது. பின்னர் அவர் அங்கிருந்து காரில் புறப்பட்டு காலாப்பட்டில் உள்ள புதுவை பல்கலைக்கழகத்திற்கு செல்கிறார். அங்கு மாணவர்களுடன் கலந்துரையாடுகிறார். இந்த நிகழ்ச்சியில் கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி, பல்கலைக்கழக துணைவேந்தர் குர்மீத் சிங் மற்றும் பேராசிரியர்கள் கலந்துகொள்கிறார்கள். இந்த நிகழ்ச்சிக்குப்பின் வெங்கையாநாயுடு அங்கிருந்து புறப்பட்டு கவர்னர் மாளிகைக்கு செல்கிறார். அங்கு சிறிது நேரம் ஓய்வு எடுக்கிறார். பின்னர் கம்பன் கலையரங்கத்தில் நடைபெறும் அரசு விழாவில் கலந்து கொள்கிறார். விழா முடிந்த பின்னர் அங்கிருந்து லாஸ்பேட்டை விமான நிலையத்திற்கு செல்கிறார். அங்கிருந்து விமானம் மூலம் சென்னை செல்கிறார்.
வெங்கையா நாயுடு வருகையை முன்னிட்டு புதுவையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இது தொடர்பாக கம்பன் கலையரங்கத்தில் நேற்று காலை உயர் போலீஸ் அதிகாரிகள் கூட்டம் நடந்தது. கூட்டத்திற்கு சீனியர் போலீஸ் சூப்பிரண்டு அபூர்வ குப்தா தலைமை தாங்கி போலீசார் மேற்கொள்ள வேண்டிய பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து விளக்கி கூறினார். கூட்டத்தில் சீனியர் போலீஸ் சூப்பிரண்டு ராகுல் அல்வால், போலீஸ் சூப்பிரண்டுகள், இன்ஸ்பெக்டர்கள், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் காவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.
வெங்கையா நாயுடு செல்லும் பாதையில் பல்வேறு இடங்களில் சாலையின் இருபுறமும் தடுப்பு கட்டைகள் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. புதுவையில் உள்ள விடுதிகளில் போலீசார் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இதே போல் புதுவை புதிய பஸ்நிலையம், ரெயில் நிலையம் உள்பட நகரின் பல்வேறு இடங்களில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அப்போது சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் யாராவது இருந்தால் அவர்களை பிடித்து போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
புதுவை வரும் துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவை வரவேற்க அரசு சார்பில் சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கவர்னர் கிரண்பெடி, முதல்-அமைச்சர் நாராயணசாமி ஆகியோரின் புகைபடத்துடன் கூடிய வரவேற்பு பேனர்கள் வைக்கப்பட்டுள்ளன.