ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை கோர்ட்டு தீர்ப்பு

ஓய்வுபெற்ற அரசு ஊழியர் கொலை வழக்கில் வாலிபருக்கு ஆயுள் தண்டனை விதித்து புதுக் கோட்டை கோர்ட்டு தீர்ப்பு கூறியது.

Update: 2018-07-05 22:15 GMT
புதுக்கோட்டை,

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி பாரதிநகரை சேர்ந்தவர் சேகர் என்ற சேகரன் (வயது 72). ஓய்வுபெற்ற அரசு ஊழியரான இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த விஜயகுமார் (38) என்பவருக்கும் இட பிரச்சினை தொடர்பாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்நிலையில் 16.9.2015 அன்று வீட்டில் இருந்த சேகரை விஜயகுமார் அரிவாளால் வெட்டி கொலை செய்தார். இந்த கொலை சம்பவம் குறித்த புகாரின் பேரில் அறந்தாங்கி போலீசார் வழக்குப்பதிவு செய்து விஜயகுமாரை கைது செய்தனர்.

பின்னர் அவர் மீது புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்து வந்த மாவட்ட முதன்மை நீதிபதி தமிழ்ச்செல்வி நேற்று தீர்ப்பு வழங்கினார். முன்விரோதத்தில் சேகரை வீடு புகுந்து அரிவாளால் வெட்டி கொலை செய்த விஜயகுமாருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும், அபராத தொகையை கட்ட தவறினால், மேலும் 1 ஆண்டு சிறை தண்டனை விதித்தும் தீர்ப்பு கூறினார். 

மேலும் செய்திகள்