பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு-அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்

பெரம்பலூரில் தமிழ்நாடு சத்துணவு- அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2018-07-05 22:30 GMT
பெரம்பலூர்,

அரியலூர் அண்ணாசிலை அருகே தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி கருப்பு உடை அணிந்து, கையில் காலித்தட்டை ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட அமைப்பாளர் தமிழரசன் தலைமை தாங்கினார். மாவட்ட குழு உறுப்பினர்கள் சுப்பையா முன்னிலை வகித்தார்.

ஆர்ப்பாட்டத்தில், ஓய்வூதியமாக ரூ.7,850 வழங்க வேண்டும். சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஊழியர்கள் ஓய்வு பெறும் போது ஒட்டுமொத்த தொகை ரூ.10 லட்சத்தை வழங்க வேண்டும். ஈம சடங்கு நிதி ரூ.25 ஆயிரமாக உயர்த்தி வழங்க வேண்டும். இலவச பஸ் பயண அட்டை வழங்க வேண்டும். பதவி உயர்வில் சென்றவர்களுக்கும் ஓய்வூதியம், மருத்துவப்படி, அகவிலைப்படி, ஓய்வூதியம் அளிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு கோரிக்கைகள் வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் அரியலூர், திருமானூர், ஆண்டிமடம், ஜெயங்கொண்டம், தா.பழூர், செந்துறை உள்ளிட்ட பகுதி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

பெரம்பலூர் மாவட்ட கலெக்டர் அலுவலகம் எதிரே, கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு சத்துணவு மற்றும் அங்கன்வாடி ஓய்வூதியர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து கையில் காலித்தட்டை ஏந்தி நூதன முறையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். ஆர்ப்பாட்டத்திற்கு சங்கத்தின் மாவட்ட கன்வீனர் செல்வமணி தலை மை தாங்கினார். மாவட்ட நிதி காப்பாளர் இளங்கோவன், ஒன்றியத் தலைவர் சாந்தப்பன், இணை கன்வீனர் புலிக்குட்டி, சங்க நிர்வாகிகள் நேசமணி, ராஜலட்சுமி உள்பட பலர் கலந்துகொண்டனர். 

மேலும் செய்திகள்