பேஸ்புக்கில் மலர்ந்த காதலில் விபரீதம்: பட்டதாரி பெண்ணை ஆபாசமாக படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டல்

பேஸ்புக்கில் மலர்ந்த காதலில் பட்டதாரி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஆபாச படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

Update: 2018-07-05 21:30 GMT
பணகுடி, 

பேஸ்புக்கில் மலர்ந்த காதலில் பட்டதாரி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து ஆபாச படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் நண்பருடன் கைது செய்யப்பட்டார்.

இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:-

உல்லாசம்

நெல்லை மாவட்டம் வடக்கன்குளத்தை சேர்ந்தவர் நம்பி மகன் சுரேஷ் (வயது 22). இவருக்கும், குமரி மாவட்டம் நாகர்கோவில் அருகே உள்ள ஒரு கிராமத்தை சேர்ந்த 21 வயது பட்டதாரி பெண்ணுக்கும் பேஸ்புக் மூலம் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறியது.

இந்த நிலையில், கடந்த 3 மாதங்களுக்கு முன்பு காவல்கிணற்றில் உள்ள ஒரு விடுதியில், சுரேசும், அந்த பெண்ணும் உல்லாசமாக இருந்ததாக கூறப்படுகிறது. அதை சுரேஷ் படம் பிடித்து வைத்து இருந்ததாக தெரிகிறது. பின்னர் சுரேசும், அவரது நண்பரான வடக்கன்குளத்தை சேர்ந்த சுப்பிரமணியன் மகன் அரிஹரசுதனும் (22) சேர்ந்து ஏற்கனவே எடுத்த ஆபாச படத்தை காண்பித்து மிரட்டி பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளனர்.

பணம் கேட்டு மிரட்டல்

இந்த நிலையில், சுரேஷ், அரிஹரசுதன் இருவரும் சேர்ந்து அந்த பெண்ணிடம் தங்களுக்கு ரூ.20 ஆயிரம் தர வேண்டும் என்றும், இல்லாவிட்டால் ஆபாச படத்தை பேஸ்புக்கில் வெளியிட்டு விடுவதாகவும் மிரட்டல் விடுத்தனர்.

இதுகுறித்து அந்த பட்டதாரி பெண் பணகுடி போலீசில் புகார் செய்தார். போலீசாரின் ஆலோசனைப்படி அந்த பெண் நேற்று காலை காவல்கிணறு சந்திப்புக்கு வந்தார். அங்கு அவரிடம் பணம் பெறுதற்காக சுரேஷ், ஹரிகரசுதன் ஆகியோர் வந்தனர். அவர்கள் இருவரையும் அங்கு நின்ற பணகுடி போலீசார் சுற்றி வளைத்து பிடித்து கைது செய்தனர்.

பேஸ்புக்கில் மலர்ந்த காதலில் பட்டதாரி பெண்ணுடன் உல்லாசம் அனுபவித்து விட்டு அதை படம் பிடித்து பணம் கேட்டு மிரட்டிய வாலிபர் நண்பருடன் கைது செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் செய்திகள்