தலைமை எழுத்தர் வீட்டுக்கு ‘சீல்’ வைப்பு அதிகாரிகளை கண்டித்து மனைவி-பாட்டி விஷம் குடித்ததால் பரபரப்பு
சிலை கடத்தல் வழக்கில் கைது செய்யப்பட்டு ஜாமீனில் வெளியில் வந்த தலைமை எழுத்தர் வீட்டுக்கு அறநிலையத்துறையினர் ‘சீல்’ வைத்தனர். இதனை கண்டித்து அவரது மனைவி மற்றும் பாட்டி ஆகியோர் விஷம் குடித்து தற்கொலைக்கு முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
கும்பகோணம்,
தஞ்சாவூர் மாவட்டம் கும்பகோணம் அருகே உள்ள பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலில் வைக்கப்பட்ட சிலைகள் மாயமானது தொடர்பாக இந்து சமய அறநிலையத்துறையின் மயிலாடுதுறை சரக இணை ஆணையராக இருந்த கஜேந்திரன், முன்னாள் செயல் அலுவலர்கள் காமராஜ், ராமச்சந்திரன், கோவில் தலைமை எழுத்தர் ராஜா உள்பட 10 பேரை போலீசார் கடந்த 2017-ம் ஆண்டு நவம்பர் மாதம் கைது செய்தனர். பின்னர் அனைவரும் ஜாமீனில் வெளியே வந்தனர். இதில் தலைமை எமுத்தர் ராஜா, பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவிலுக்கு சொந்தமான இடத்தில் குடியிருந்து வருகிறார். இந்த நிலையில் இந்து சமய அறநிலையத்துறை கும்பகோணம் உதவி ஆணையர் இளையராஜா, திருவிடைமருதூர் தாசில்தார் ராஜேஸ்வரி, திருவிடைமருதூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராமச்சந்திரன் ஆகியோர் கொண்ட குழுவினர் பந்தநல்லூர் பசுபதீஸ்வரர் கோவில் கோட்டை தெருவில் குடியிருக்கும் எழுத்தர் ராஜாவின் வீட்டுக்கு நேற்று சென்றனர்.
ஐகோர்ட்டு உத்தரவுப்படி கோவில் இடத்தில் குடியிருக்கும் வீட்டை உடனடியாக காலி செய்ய வேண்டும். இல்லையென்றால் ‘சீல்’ வைக்கப்படும் என உதவி ஆணையர் ராஜாவிடம் தெரிவித்தார். இதற்கு ராஜா கால அவகாசம் கேட்டுள்ளார். அதை ஏற்க மறுத்த அறநிலையத்துறையினர், வீட்டில் இருந்தவர்களை வெளியேற்றி உடனடியாக வீட்டை பூட்டி ‘சீல்’ வைத்தனர்.இதனால் ராஜா, அவரது மனைவி அபினேஸ்வரி(வயது 35), பாட்டி சந்திரா(80) ஆகியோர் அதிர்ச்சி அடைந்தனர்.
இதையடுத்து ராஜாவின் மனைவி அபினேஸ்வரியும், பாட்டி சந்திராவும் வீட்டின் தோட்டத்தில் வைத்திருந்த வாழைமரங்களுக்கு பயன்படுத்தும் பூச்சிக்கொல்லி மருந்தை(விஷம்) குடித்தனர். உடனடியாக அவர்களை 108 ஆம்புலன்ஸ் மூலம் கும்பகோணம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
சிலை கடத்தல் வழக்கில் ஜாமீனில் வந்த தலைமை எழுத்தர் வீட்டுக்கு அறநிலையத்துறையினர் ‘சீல்’ வைத்ததால் அதிகாரிகளை கண்டித்து மனைவி மற்றும் பாட்டி ஆகியோர் விஷம் குடித்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.