தூத்துக்குடி அருகே ஒரு வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை காரணம் என்ன? போலீசார் விசாரணை
தூத்துக்குடி அருகே ஒரு வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்களது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தூத்துக்குடி,
தூத்துக்குடி அருகே ஒரு வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டார். அவர்களது சாவுக்கான காரணம் என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:–
கார் டிரைவர்தூத்துக்குடி அருகே உள்ள சாயர்புரம் நந்தகோபாலபுரத்தை சேர்ந்தவர் பாலமுருகன், கார் டிரைவர். இவருக்கும், தூத்துக்குடி அருகே உள்ள மீளவிட்டானை சேர்ந்த தனலட்சுமி (வயது 34) என்பவருக்கும் கடந்த 2010–ம் ஆண்டு திருமணம் நடந்தது. இவர்களுக்கு பர்வினா (6), பர்வின் (1) ஆகிய குழந்தைகள்.
கடந்த 3–ந் தேதி பாலமுருகன், தனது மனைவி தனலட்சுமி மற்றும் குழந்தைகளை மீளவிட்டானில் உள்ள மாமனார் வீட்டுக்கு அழைத்துச்சென்றார். அங்கு நடைபெறும் பத்திரகாளியம்மன் கோவில் கொடை விழாவையொட்டி அவர்கள் அங்கு வந்தனர். பின்னர் மனைவி, குழந்தைகளை மீளவிட்டானில் விட்டுவிட்டு பாலமுருகன் ஊருக்கு சென்று விட்டார்.
கிணற்றில் பிணங்கள்நேற்று முன்தினம் மாலையில் மீண்டும் மனைவி மற்றும் குழந்தைகளை அழைத்து செல்வதற்காக பாலமுருகன் மீளவிட்டானுக்கு வந்தார். அப்போது தனது மாமனார் வீட்டில் தனலட்சுமி, மகன் பர்வின் ஆகியோரை காணவில்லை. இதனால் கோவில் மற்றும் உறவினர் வீடுகளில் அனைவரும் தேடி பார்த்தனர். ஆனால், அவர்கள் கிடைக்கவில்லை.
நேற்று காலையில் மீளவிட்டானுக்கும், பண்டாரம்பட்டிக்கும் இடையே காட்டுப்பகுதியில் உள்ள தனியாருக்கு சொந்தமான சுமார் 35 அடி ஆழம் கொண்ட கிணற்றில் தனலட்சுமியும், அவரது மகன் பர்வினும் பிணங்களாக மிதந்தது தெரியவந்தது. இதை பார்த்து பாலமுருகன் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.
குழந்தையுடன் தற்கொலைஇதுகுறித்து தகவல் அறிந்த தூத்துக்குடி சிப்காட் போலீசார் மற்றும் சிப்காட் தீயணைப்பு நிலைய அலுவலர் (போக்குவரத்து) ஆ.சண்முகம் தலைமையில் தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்துக்கு வந்தனர். அவர்கள், கிணற்றில் மிதந்த தனலட்சுமி மற்றும் பர்வின் உடல்களை மீட்டனர்.
உடல்களை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். இதையடுத்து போலீசார் நடத்திய விசாரணையில், தனலட்சுமி நேற்று முன்தினம் மதியம் கோவிலில் சாமி கும்பிட்டு விட்டு வீட்டுக்கு செல்வதாக கூறி சென்றுள்ளார். ஆனால் அவர் நீண்ட நேரமாகியும் வீடு திரும்பவில்லை. இந்த நிலையில் அவர் மகனுடன் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
காரணம் என்ன?இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து குழந்தையுடன் தனலட்சுமி தற்கொலை செய்து கொண்டதற்கான காரணம் என்ன? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இதற்காக தனலட்சுமியின் செல்போனில் கடைசியாக பேசியது யார்? என்பது உள்ளிட்ட தகவல்களை சேகரித்து வருகிறார்கள்.
மேலும் அவர்களின் சாவுக்கு வேறு ஏதேனும் காரணம் உள்ளதா? என்பது குறித்தும் விசாரிக்கிறார்கள். ஒரு வயது மகனுடன் தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட பரிதாப சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.