ரெயிலில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசி பறிமுதல்
ரெயிலில் கேரளாவுக்கு கடத்த முயன்ற 500 கிலோ ரேஷன் அரிசியை, உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.;
நாகர்கோவில்,
மதுரையில் இருந்து புனலூருக்கு தினமும் இயக்கப்படும் பயணிகள் ரெயில் அதிகாலை 4.30 மணிக்கு நாகர்கோவில் சந்திப்பு ரெயில் நிலையத்துக்கு வந்து செல்வது வழக்கம். ஆனால் இந்த ரெயில் நேற்று அதிகாலை 50 நிமிடம் தாமதமாக, அதாவது 5.20 மணிக்கு வந்து, பின்னர் புனலூருக்கு புறப்பட்டு சென்றது.
நாகர்கோவிலில் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் ரெயில்களில் கேரளாவுக்கு ரேஷன் அரிசி உள்ளிட்ட உணவு பொருட்கள் கடத்தப்படுகிறதா? என்று சோதனை செய்வது வழக்கம். அதேபோல் நேற்று நாகர்கோவில் வந்த மதுரை–புனலூர் ரெயிலிலும் உணவு பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு இன்ஸ்பெக்டர் செல்வி, சப்–இன்ஸ்பெக்டர் ஜெகன் உள்ளிட்ட போலீசார் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அந்த ரெயிலின் 3 பெட்டிகளில் சிறு, சிறு மூடைகளில் ரேஷன் அரிசி அடைக்கப்பட்டு, பயணிகளின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. மொத்தம் 500 கிலோ ரேஷன் அரிசி அவற்றில் இருந்தது. ஆனால் ரேஷன் அரிசி மூடையை யாரும் சொந்தம் கொண்டாடவில்லை. இதனால் போலீசார் அனாதையாக கிடந்த 500 கிலோ ரேஷன் அரிசியையும் பறிமுதல் செய்தனர்.
மதுரை மற்றும் திருநெல்வேலிக்கு இடைப்பட்ட பகுதிகளில் இருந்து கேரளாவுக்கு பயணிகளோடு, மர்ம ஆசாமிகள் போல் 500 கிலோ ரேஷன் அரிசியை கடத்த முயன்றுள்ளனர். ரெயிலில் திடீரென சோதனை மேற்கொண்ட போலீசாரை கண்டதும் ரேஷன் அரிசியை கடத்தியவர்கள் தப்பிச் சென்றிருக்கலாம் அல்லது எதுவும் தெரியாதவர் போல பயணிகளோடு அமர்ந்து அதே ரெயிலில் பயணம் செய்திருக்கலாம் என போலீசார் தெரிவித்தனர்.
பின்னர் பறிமுதல் செய்யப்பட்ட 500 கிலோ ரேஷன் அரிசியையும் போலீஸ் வாகனத்தில் ஏற்றி, நாகர்கோவில் நேசமணி நகர் பகுதியில் அமைந்துள்ள உணவு பொருள் கடத்தல் பிரிவுக்கு கொண்டு வந்தனர். அதன் பிறகு மாலையில் அவற்றை நாகர்கோவில் கோணத்தில் உள்ள நுகர்பொருள் வாணிபக்கழக குடோனில் ஒப்படைப்பதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டனர்.
மதுரை–புனலூர் பயணிகள் ரெயிலில் நேற்று அதிகாலை திடீரென போலீசார் சோதனை நடத்தியது, பயணிகளிடையே பரபரப்பை ஏற்படுத்தியது.