வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ள முட்புதர்கள் உடனடியாக அகற்ற பொதுமக்கள் கோரிக்கை

வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் செல்லும் பாதையை ஆக்கிரமித்துள்ள முட்புதர்களை அகற்ற வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Update: 2018-07-04 22:30 GMT
திரு.வி.க. நகர்,

சென்னை பேசின்பிரிட்ஜ் மற்றும் பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு இடையே வியாசர்பாடி, சர்மாநகர், எம்.கே.பி.நகர், புளியந்தோப்பு, கன்னிகாபுரம், ஓட்டேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயனுள்ள வகையில் 1979-ம் ஆண்டு வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது.

வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகில் அருந்ததி நகர் எனப்படும் பகுதி உள்ளது. இப்பகுதியில் போலெரி அம்மன் கோவில் தெரு உள்பட 12 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த அருந்ததி நகர் பகுதி மக்கள் ரெயில் மார்க்கமாக சென்டிரல், ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்பட இடங்களுக்கு செல்ல வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர்.

இப்பகுதிவாசிகள் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்திற்கு செல்ல போலெரி அம்மன் கோவில் தெருவின் ஆரம்ப பகுதியில் இருந்து ரெயில் தண்டவாளத்தை ஒட்டிச் செல்லும் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

சுமார் 300 மீட்டர் தூரம் உள்ள இந்த பாதை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், பாதை தெரியாத அளவுக்கு முட்புதர்கள் சூழ்ந்து ஆக்கிரமித்து உள்ளதால் ஏதோ காட்டுக்குள் செல்லும் ஒத்தையடி பாதைபோல் காணப்படுகிறது.

மேலும் அந்த பாதையில் மின்கம்பிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இங்கு சமூக விரோதிகள் கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் அருந்ததி நகர் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பிட்ட இந்த 300 மீட்டர் பாதையானது ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தம் என்பதால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெயில்வே நிர்வாகத்தினர் பொதுமக்கள் அப்பகுதியில் செல்ல தடை விதித்து சுவர் அமைக்க முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் சுவர் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

குப்பைகளாலும், முட்புதர்களாலும் சூழப்பட்ட இந்த ஆபத்தான வழியில் செல்ல பயந்து அப்பகுதி மக்கள் வியாசர்பாடி, கணேசபுரம் வழியாக சுமார் 2 கி.மீ தூரம் சுற்றி வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் செல்கின்றனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி மின் விளக்குகள் அமைக்கவும், குப்பைகளை, முட்புதர்களை அகற்றவும் எங்களுக்கு உரிமை இல்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை.

சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நலன் கருதி இந்த சாலையை சுத்தம் செய்து, மின்விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

சென்னை பேசின்பிரிட்ஜ் மற்றும் பெரம்பூர் ரெயில் நிலையத்திற்கு இடையே வியாசர்பாடி, சர்மாநகர், எம்.கே.பி.நகர், புளியந்தோப்பு, கன்னிகாபுரம், ஓட்டேரி பகுதியில் வசிக்கும் மக்களுக்கு பயனுள்ள வகையில் 1979-ம் ஆண்டு வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அமைக்கப்பட்டது.

வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் அருகில் அருந்ததி நகர் எனப்படும் பகுதி உள்ளது. இப்பகுதியில் போலெரி அம்மன் கோவில் தெரு உள்பட 12 தெருக்கள் உள்ளன. இங்கு சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.

இந்த அருந்ததி நகர் பகுதி மக்கள் ரெயில் மார்க்கமாக சென்டிரல், ஆவடி, திருவள்ளூர், கும்மிடிப்பூண்டி உள்பட இடங்களுக்கு செல்ல வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்திற்கு வருகின்றனர்.

இப்பகுதிவாசிகள் வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையத்திற்கு செல்ல போலெரி அம்மன் கோவில் தெருவின் ஆரம்ப பகுதியில் இருந்து ரெயில் தண்டவாளத்தை ஒட்டிச் செல்லும் பாதையை பயன்படுத்தி வருகின்றனர்.

சுமார் 300 மீட்டர் தூரம் உள்ள இந்த பாதை முழுவதும் குப்பைகள் நிறைந்து காணப்படுகிறது. மேலும், பாதை தெரியாத அளவுக்கு முட்புதர்கள் சூழ்ந்து ஆக்கிரமித்து உள்ளதால் ஏதோ காட்டுக்குள் செல்லும் ஒத்தையடி பாதைபோல் காணப்படுகிறது.

மேலும் அந்த பாதையில் மின்கம்பிகள் இல்லை. இதனால் இரவு நேரங்களில் இங்கு சமூக விரோதிகள் கஞ்சா புகைப்பது, மது அருந்துவது போன்ற சமூக விரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்.

இதனால் அருந்ததி நகர் மக்கள் மிகவும் சிரமம் அடைந்துள்ளனர். குறிப்பிட்ட இந்த 300 மீட்டர் பாதையானது ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தம் என்பதால் கடந்த ஒரு வருடத்திற்கு முன்பு ரெயில்வே நிர்வாகத்தினர் பொதுமக்கள் அப்பகுதியில் செல்ல தடை விதித்து சுவர் அமைக்க முற்பட்டனர். இதற்கு எதிர்ப்பு தெரிவித்து அப்பகுதி மக்கள் முற்றுகையிட்டதால் சுவர் அமைக்கும் திட்டம் கைவிடப்பட்டது.

குப்பைகளாலும், முட்புதர்களாலும் சூழப்பட்ட இந்த ஆபத்தான வழியில் செல்ல பயந்து அப்பகுதி மக்கள் வியாசர்பாடி, கணேசபுரம் வழியாக சுமார் 2 கி.மீ தூரம் சுற்றி வியாசர்பாடி ஜீவா ரெயில் நிலையம் செல்கின்றனர்.

இதுபற்றி மாநகராட்சி அதிகாரிகளிடம் புகார் தெரிவித்தால் ரெயில்வே நிர்வாகத்திற்கு சொந்தமான இடத்தில் அனுமதியின்றி மின் விளக்குகள் அமைக்கவும், குப்பைகளை, முட்புதர்களை அகற்றவும் எங்களுக்கு உரிமை இல்லை என்று அவர்கள் தெரிவிக்கின்றனர். இதுதவிர சம்பந்தப்பட்ட ரெயில்வே அதிகாரிகளிடம் பலமுறை புகார் கொடுத்தும் எந்த பயனும் இல்லை.

சுமார் 6 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களின் நலன் கருதி இந்த சாலையை சுத்தம் செய்து, மின்விளக்குகள் அமைத்து கொடுக்க வேண்டும் என அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் செய்திகள்