கைலாய யாத்திரையின் போது நிலச்சரிவில் சிக்கிய சேலம் தம்பதியை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை
கைலாய யாத்திரையின் போது நிலச்சரிவில் சிக்கிய சேலம் தம்பதியை சொந்த ஊருக்கு அழைத்து வர நடவடிக்கை மேற்கொண்டுள்ளதாக கலெக்டர் ரோகிணி தெரிவித்துள்ளார்.
சேலம்,
சீனாவின் கட்டுப்பாட்டில் உள்ள திபெத்திய பகுதியில் கைலாஷ் மானசரோவர் ஏரி உள்ளது. மானசரோவருக்கு தமிழகம், கேரளா உள்பட பல்வேறு மாநிலங்களில் இருந்து ஏராளமானவர்கள் கைலாய புனித யாத்திரை மேற்கொண்டுள்ளனர். இந்த நிலையில் அங்கு ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 1,500-க்கும் மேற்பட்டவர்கள் தவிக்கிறார்கள். அவர்களை மீட்கும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது. சேலம் மாவட்டம் மேட்டூர் தாலுகா பி.என்.பட்டி கிராமத்தை சேர்ந்த தம்பதியான சேகர்(வயது 60), கீதா(51) ஆகியோர் கைலாய யாத்திரைக்கு சென்றனர். நிலச்சரிவில் சிக்கி தவித்த அவர்கள் இருவரும் மீட்கப்பட்டு சிமிகோட் என்ற பகுதியில் பாதுகாப்பாக உள்ளனர். அவர்களை சொந்த ஊருக்கு அழைத்து வர மாவட்ட நிர்வாகம் சார்பில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக சேலம் மாவட்ட கலெக்டர் ரோகிணி வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறி இருப்பதாவது:-
சேலம் மாவட்டத்தை சேர்ந்த சேகர் மற்றும் அவருடைய மனைவி கீதா ஆகியோர் மானசரோவருக்கு புனித யாத்திரை சென்றுள்ளனர். இதுகுறித்த தகவல் அவருடைய மகள் பத்மபிரியா மூலம் மாவட்ட நிர்வாகத்திற்கு தெரியவந்தது. இதற்கிடையில் நிலச்சரிவில் சிக்கிய சேகர், கீதா ஆகிய இருவரும் பத்திரமாக மீட்கப்பட்டு தற்போது பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளதாக தகவல் வந்துள்ளது.
இயற்கை சீற்றத்தின் காரணமாக அவர்கள் இருவரும் சொந்த ஊருக்கு திரும்பி வருவதற்கு சிரமம் ஏற்பட்டுள்ளது. மேலும் அவர்களை பாதுகாப்பாக அழைத்து வருவதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மாவட்ட நிர்வாகம் மூலம் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறி உள்ளார்.