சேலம் 8 வழி சாலைக்கு எதிராக கருத்து ஆம் ஆத்மி கட்சி தமிழக ஒருங்கிணைப்பாளர் கைது
8 வழி பசுமை சாலைக்கு எதிராக சமூக வலைத்தளங்களில் கருத்து தெரிவித்த ஆம் ஆத்மி கட்சி ஒருங்கிணைப்பாளரை போலீசார் கைது செய்தனர்.;
அயோத்தியாப்பட்டணம்,
சென்னை-சேலம் இடையேயான 8 வழி சாலைக்கு தமிழக அரசு சார்பில் நிலங்கள் கையகப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. இதற்கு விவசாயிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இதுதொடர்பாக பல்வேறு அமைப்பினரும் அரசுக்கு எதிராக கருத்து தெரிவித்து வருகின்றனர். போராட்டங்களும் நடத்தி வருகின்றனர்.
இந்தநிலையில் ஆம் ஆத்மி கட்சியின் தமிழக ஒருங்கிணைப்பாளர் வசீகரன், 8 வழி சாலைக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக வலைத்தளங்கள் மற்றும் தனியார் ஊடகங்கள் மூலம் பேசி வருகிறார். அப்போது அவர், 8 வழி சாலை அமைத்தால் 16 பேரை வெட்டுவேன் என்று கருத்து பதிவிட்டதாக கூறப்படுகிறது.
இது தொடர்பாக சேலம் மாவட்டம் குள்ளம்பட்டியை சேர்ந்த கிராம நிர்வாக அலுவலர் இலங்கேஸ்வரன் சேலம் காரிப்பட்டி போலீசில் புகார் செய்தார். இதையடுத்து வசீகரனை கைது செய்வதற்காக வாழப்பாடி துணை போலீஸ் சூப்பிரண்டு சூரியமூர்த்தி, போலீஸ் இன்ஸ்பெக்டர் சண்முகசுந்தரம் ஆகியோர் தலைமையில் போலீசார் சென்னை சென்றனர்.
பின்னர் நேற்று காலை மதுரவாயல், சீனிவாசா நகரில் உள்ள வசீகரன் வீட்டுக்கு வந்த போலீசார் அவரை கைது செய்து, சேலம் அழைத்து வந்தனர். அவர் மீது கொலை மிரட்டல், வன்முறையை தூண்டும் வகையில் பேசுதல், அரசுக்கு எதிராக பேசுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளின் கீழ் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர்.
இதைத்தொடர்ந்து நேற்று மாலை வசீகரனிடம் காரிப்பட்டி போலீஸ் நிலையத்தில் வைத்து போலீசார் விசாரணை நடத்தினர். பின்னர் அவரை போலீசார் வாழப்பாடி குற்றவியல் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். அப்போது வசீகரனை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி சந்தோசம் உத்தரவிட்டார். இதையடுத்து அவர் சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏற்கனவே சேலம் 8 வழி சாலையை அமைத்தால் 8 பேரை வெட்டுவேன் என்று பேசிய நடிகர் மன்சூர் அலிகானை சேலம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.