அடையாளம் தெரியாத ஆண்-பெண் பிணம் கிடந்ததால் பரபரப்பு உடல்களை மீட்டு போலீசார் விசாரணை
பேரளம் அருகே அடையாளம் தெரியாத ஆண் மற்றும் பெண் பிணம் கிடந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. அவர்கள் உடல்களை மீட்டு போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நன்னிலம்,
பேரளம் அருகே நடுக்கந்தங்குடி சோதனை சாவடி அருகே 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத ஆண்பிணம் கிடந்தது. இதை பார்த்த அந்தபகுதி மக்கள் கொல்லாபுரம் கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரனுக்கு தகவல் தெரிவித்தனர். அவர் பேரளம் போலீசில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் மற்றும் ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இறந்து கிடந்தவரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பிவைத்தனர். இதுபற்றி பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்தவர் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதேபோல மேனாங்குடி அருகே 40 வயது மதிக்கத்தக்க அடையாளம் தெரியாத பெண்பிணம் கிடந்தது. இதுகுறித்து அந்தபகுதி மக்கள் பேரளம் போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். தகவல் அறிந்ததும் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அதிகாரி ராஜேந்திரன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து இறந்து கிடந்த பெண்ணின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக திருவாரூர் மருத்துவகல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுதொடர்பாக பேரளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து இறந்த கிடந்த பெண் யார்? எந்த ஊரை சேர்ந்தவர்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். பேரளம் அருகே அடுத்தடுத்து அடையாளம் தெரியாத ஆண்-பிணம் கிடந்ததால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.