அரசு பள்ளி வளாகத்தில் சுவர் ஏறி குதித்த வாலிபர் மாணவிகளை கடத்த வந்தாரா? போலீசார் விசாரணை
அரிமளம் அரசு பள்ளி வளாகத்தில் சுவர் ஏறி குதித்த வாலிபர் மாணவிகளை கடத்த வந்தாரா? என போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
அரிமளம்,
புதுக்கோட்டை மாவட்டம், அரிமளம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் ஏராளமான மாணவிகள் படித்து வருகின்றனர். இந்தநிலையில் நேற்று மாணவிகள் வழக்கம்போல் பள்ளிக்கு வந்தனர். வகுப்றையில் ஆசிரியர்கள் பாடம் நடத்தி கொண்டிருந்த நிலையில் 6-ம் வகுப்பு படிக் கும் மாணவிகள் 3 பேர் சிறுநீர் கழிப்பதற்காக பள்ளி வளாகத்தில் உள்ள கழிப்பறைக்கு சென்றுள்ளனர். அப்போது பள்ளி வளாக சுற்றுச்சுவரில் இருந்து ஒரு வாலிபர் ஏறி குதித்து உள்ளே வந்தார். அவர் கையில் வெள்ளை நிற பொடி வைத்து இருந்தார். பின்னர் 3 மாணவிகளிடம் உங்கள் அப்பா உங்களிடம் பேச வேண்டும் என்று கூறியதாக அந்த மாணவிகளிடம் கூறினார். இதனால் அதிர்ச்சி அடைந்த மாணவிகள் நாங்கள் யாரிடமும் பேச மாட்டோம் எனக்கூறி சத்தம் போட்டு கொண்டு வகுப்பறைக்குள் ஓடி விட்டனர். இதனால் பயந்துபோன அந்த வாலிபர் அங்கிருந்து மீண்டும் சுவர் ஏறி குதித்து தப்பி சென்று விட்டார்.
இதுகுறித்து தகவல் அறிந்த பள்ளி தலைமையாசிரியர், ஆசிரியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். பின்னர் இச்சம்பவம் தொடர்பாக மாவட்ட கல்வி துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் மாவட்ட கல்வி அதிகாரி சாமிசத்தியமூர்த்தி தலைமையிலான அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து மாணவிகள் மற்றும் ஆசிரியர்களிடம் விசாரணை நடத்தினர். இதுகுறித்து அறிந்த மாணவிகள் பெற்றோர்கள் ஏராளமானோர் பள்ளிக்கு முன்பு திரண்டனர். இதையடுத்து பள்ளி நிர்வாகிகள் இப்பள்ளி மாணவிகள் யாரும் கடத்தப்படவில்லை. பாதுகாப்பாக உள்ளனர் என தெரிவித்தனர். இதனால் நிம்மதி அடைந்த பெற்றோர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். மேலும் பள்ளி முன்பு மாணவிகள் அனைவரும் பாதுகாப்பு உள்ளனர் என்ற அறிவிப்பு பலகையும் வைக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து அரிமளம் போலீஸ் நிலையத்தில் புகார் செய்யப்பட்டது. புகாரின்பேரில் போலீசார் மாணவிகளை கடத்துவதற்காக அந்த வாலிபர் அங்கு வந்தாரா? அந்த வாலிபர் யார்? என தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அரிமளம் பகுதி முழுவதும் பரவியது. இதனால் பதற்றம் அடைந்த பெற்றோர்கள் தங்களது குழந்தைகள் படிக்கும் பள்ளியிலும் இதுபோன்ற சம்பவங்கள் நடந்ததா? என்று விசாரிப்பதாக சம்பவம் நடந்த பள்ளியின் அருகில் இருந்த மற்றொரு பள்ளியின் முன்பும் கூடினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து அந்த பள்ளியின் முன்வாசலும் பூட்டப்பட்டது. இதேபோன்று மிரட்டு நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பு கத்தியை காட்டி மிரட்டி 10-ம் வகுப்பு மாணவனை கடத்த முயற்சி செய்த சம்பவம் நடந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இதுகுறித்து உடனடியாக மாவட்ட நிர்வாகம் மற்றும் போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாணவ-மாணவிகள், பெற்றோர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.